பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வடநாட்டுத் திருப்பதிகள்

“ஓய்ந்தமாவும் உடைந்தகுன்றும் அன்றியும் நின்றழலால் தேய்ந்தவேயும் அல்லது இல்லாச்

சிங்கவேழ் குன்றமே’ (ஒய்ந்த- களைத்துப்போன; மா-விலங்குகள், அழல் நேருப்பு: வேய்-மூங்கில்) என்கின்றார் ஆழ்வார். “அலைந்து திரிந்து களைத்துப் போன மிருகங்களை அங்குக் காணலாம்; மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்து நெருப்புப் பற்றி எரிந்து குறை கொள்ளியாக இருக்குமாற்றைச் சிறப்பாகக் காணலாம். இன்னும், .

“காய்த்தவாகை கெற்றொலிப்பக்

கல்லதர்வேய்ங் கழைபோய் தேய்த்ததியால் விண்சிவக்கும்

சிங்கவேழ் குன்றமே.”

(காய்த்த-காய்கள் நிறைந்த ஒலிப்ப-ஒலியுண்டாக்க; கல் அதர்-கல்வழி, வேய்கழை-குழல் மூங்கில்}

என்று காட்டுவார் ஆழ்வார் வாகை நெற்றுகள் காற்று வீசுவதால் ஒலிக்கின்றன. மூங்கில்கள் உராய்வதால் உண் டான செந்தீ விண் முழுவதையும் சிவக்கச் செய்கின்றது’ என்கின்றார். சில சமயம் சுழல் காற்று சிவந்த நெருப்பை வாரிக்கொண்டு விண் முழுவதும் ஓடிப் பரவுகின்றது.” மூங்கில்கள் நெருப்பில் வேகின்றபோது ஒலி உண்டாகின் றது; அந்த நெருப்பில் கற்களும் வேகின்றன.” மேலும் அந்த மலைச் சூழ்நிலையில் நெல்லி மரங்கள் கல்லிடை களில் முனைத்து வளர்ந்து அவற்றினிடையே வேரோடுகையினால் அந்த வேர்கள் பருத்துப் பாறைகளையும்

T9 திரு. 17:3 11. ‘ όλφ. 1-7 : 5 16. . 1.7 : 8. 12. . 1.? :