பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 வடநாட்டுத் திருப்பதிகள்

[நசை-விருப்பம், நக்கு-சிரித்து உருமு-இடி, இசைபுகழ்; எற்றினன் - அறைந்தனன்; திசைதிக்கு; றிே-பீறி) என்று நரசிங்கப்பெருமான் துணினின்றும் வெளிப்போத் தன்மையைக் காட்டுவான். இத்தகைய பெருமான் திருக் கோயில் கொண்ட இடம் சிங்கவே.ழ் குன்றமாகும்.

இந்த சிங்கவே.ழ் குன்றத்தில் எம்பெருமான் ஒன்பது இடங்களில் ஒன்பது நரசிம்மர்களாக எழுந்தருளியுள் ளான். ஒன்பது நரசிம்ம சந்நிதிகளுள் முதன்மையானதும் முக்கியமானதுமான கஜதீர்த்தக்கலையில் எழுந்தருளியிருக் கும் அகோபில நரசிம்மர் (1) சந்நிதி. இவர் சக்கராசனத் தில் எழுந்தருளியுள்ளார். திருக்கைகளில் பஞ்சாயுதங்கள். இந்த எம்பெருமானை நான்முகனும் சிவனும் நாத்தழும்ப முறையால் ஏத்தினதாகப் புராண வரலாறு. மேல் அகோபிலத்துக்கு வண்டியில் போகும்போதே வண்டியினின்றும் இறங்கி வழியிலுள்ள இரண்டு நரசிம் மர்களைச் சேவிக்கின்றோம். இவர்கள் கீழ்அகோபிலத் தினின்று சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளனர். ஒருவர் சத்ர வட நரசிம்மர் (2) இவர் ஒரு அரச மரத்தடியில் கிழக்கே திருமுகமண்டலத்துடன் அரவண்ை மேல் வீற்றிருந்த திருக்கோலமாய் அதிகாம்பிரியத்துடன் சேவை சாதிக்கின்றார். இவ்வெம்பெருமானுக்கு இசை யில் திருவுள்ளம் அதிகம் என்று சொல்லப்பெறுகின்றது. மற்றொருவர் யோக நரசிம்மர் (3). இவர் ஒரு சிறிய திருக் கோயிலில் கால்மீது கால்போட்டுக்கொண்டு முன் னிரண்டு கை களும் முழங்கால்களின்மீது தங்கிய வண்ணம் யோகம் செய்யும் பாவனையில் எழுந்தருளி யுள்ளார்.

மேல் அகோபிலத்திலுள்ள திருக்கோயில் கருடாத்திரி, வேதாத்திரி என்ற இரண்டு குன்றுகளுக்கிடையேயுள்ள பாவநாசினி என்ற நதியருகில் அமைந்துள்ளது. தெற்குப்