பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 வடநாட்டுத் திருப்பதிகள்

பெற்றுள்ளதாக அறிகின்றோம். பிரகலாத நரசிம்ம னருகில் பிரகலாத பாறை’ என வழங்கும் கல்மேடை ஒன்றுள்ளது. இதிலமர்ந்துதான் பிரகலாதன் எம்பெரு மானிடம் பாடங்களைப் பயின்றான் என்பது புராண் வரலாறு. இங்கிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ‘உக்குஸ்தம்பம் வன வழங்கும் துரண் உள்ளது. இதுவே: இரணியன் புடைத்த தூண்; எம்பெருமான் நரசிம்ம. உருவமாங் வெளிப்பட்ட துண். இங்கிருந்து சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் சேவை சாதிப் பவர் ஜுவால நரசிம்மர் (7): இப்பெருமானுக்குக் கார்த்தி கைத் திங்களில் நெய்யில் அல்லது எண்ணெயில் திரு. விளக்கு ஏற்றும் வழக்கம் இருந்து வருகின்றது. இங்கிருந்து (அல்லது கீழ் அகோபிலத்திலிருந்து) சுமார் ஏழரை கிலோ மீட்டர் தொலைவில் ஸ்வேதாத்திரி குன்றில் எழுந்தருளி இருப்பவர் பாவன நரசிம்மர் (8); இவரைப் பார்முலிடி நரசிம்மர் என்றும் வழங்குவதுண்டு. மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருப்பவர் மாலோல. நரசிம்மர். இவரை ஆராதன தெய்வமாகக் கொண்டுதான் பிற்காலத்தில் அகோபில மடம் நிறுவப்பெற்றதாக வரலாறு. மலையடிவாரத்திலிருந்து சற்றுத் தொலைவில் அட்சய தீர்த்தத்திற்கு அருகில் எழுந்தருளி இருப்பவர் பார்க்கவ நரசிம்மர் (9); வடக்கு நோக்கிய திருமுக மண்ட லத்தர். அட்சய தீர்த்தத்தில் என்றும் நீர் அமுத தாரை யாய் வற்றாது இருக்கும்; திருத்தல பயணிகட்கு நீர் வசதியை நல்குவது.

இந்த ஒன்பது நரசிம்மர்களையும் சேவித்த நாம் சென்று காண்டாற் கரிய (5), தெய்வமல்லால் செல்ல வொண்ணா (4) என்ற ஆழ்வார் பாசுரங்களில் ஆழ்ங். கால்பட்டு அநுபவிக்கின்ற்ோம். அல்லி மாதர் புல்க நின்ற ஆயிரந் தோளனை* சேவித்த களிப்பில் மூழ்கி

24. பெரிய திரு. 1. 7; 9