பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்தி நகர்க் கோமான் 39

இற்பிறப்பு என்ப தொன்றும்

இரும்பொறை என்ப தொன்றும்

கற்பெனும் பெயர தொன்றும்

களிருடம் புரியக் கண்டேன்.”*

(வேற்பு-மலை; பொறை-பொறுமை1

என்று தவம் செய்த தவமாம் தையலின் பெருமையை எடுத்தோதுகின்றான். ‘இராமாயண காவியம் முழுவதும் பிராட்டியின் பெருமை பொருந்திய சரிதமே’ என்று வால்மீகி பகவானும் வாயோலையிட்டு வைக்கின்றான். இதனைத் திருவுளங்கொண்ட பராசரபட்டர்” என் தாயே, ஸ்ரீமத் ராமாயணமும் உன்னுடைய சரிதையைச் சொல்லியே வாழ்கின்றது’ என்று அருளிச் செய்தார்.

வாரணாசியில் நகரத்தார் விடுதியில் தங்கியிருக்கும் நம்முடைய மனத்தில் இந்த எண்ணங்கள் அலையிட்டு எழுகின்றன. இந்த நிலையில் பகலுணவிற்குமேல் திருவயோத்திக்குப் புறப்படுகின்றோம். இந்தந் திவ்விய தேசம் வாரணாசிக்கும் இலக்னோவிற்கும் இடையில் கிழக்கு இருப்பூர்திப் பாதையில் உள்ளது. இதுவும் ஓர் இருப்பூர்தி நிலையமே இது பைசபாட் என்ற நிலையத் திலிருந்து ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அயோத்தி இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஊருக் குச் செல்வதற்குத் தோங்காக்கள் (ஒருவகையான குதிரை வண்டிகள்) கிடைக்கும். நமக்குத் துணை செய்வதற் கென்றே அன்று காலையிலேயே விடுதியிலிருந்து, விடுதித் தொண்டர் ஒருவரை அனுப்பியிருந்தார் விடுதிப்

4. கம்ப சுந்தர. திருவடிதொழு-62 5. ஸ்ரீராமா. பால-4:7 6. இவர் கூரத்தாழ்வானுட்ைய புதல்வர்: எம்பாருடைய மாணாக்கர்

நஞ்சீயருக்கு ஆசிரியர். 7. ஸ்ரீ குனரந்த கோசம்-14