பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்தி நகர்க் கோமான்

41



அயோத்திக்கு அரசனான இராமன் சுற்றகிமலாம் பின் தொடரத் தொல்கானம் அடைதல், தனக்கே அற்றுத் தீர்ந்த அடியார்கட்கு அருமருந்து போலிருத்தல்”, வாலியை வானுலகுக்கு ஏற்றிக் கதிரவன் மைந்தனுக்கு அரசு அளித்தல், வெங்கதிரோன் குலத்துக்கு ஒரு விளக்காய்த் தோன்றுதல்,” இராவணனைக் கொன்ற பின் அயோத்தி அரசை ஏற்றல். அகத்தியன் வாயிலாக இராவணன் வரலாற்றைக் கேட்டல், மிதிலைச் செல்வி பெற்ற குசலவர்களின் வாயிலாகத் தன் வரலாறு கேட்டல்’ ஆகிய நிகழ்ச்சிகளில் ஆழங்கால்படுகின்றார் குலசேகரப் பெருமாள். நாட்டுக்குத் திரும்ப அழைத்துவர எண்ணிய பரத நம்பிக்கு பாதுகைகளை அளித்தல்’, பரதாழ் வானுக்கு அடிசூடுகையாகின்ற அரசு ஈதல், கைகேயி சொற்கேட்டு தண்டகாரண்யம் அடைதல், சூர்ப்பனகை யின் மூக்கும், காதும் வெம்முரண் முலைக் கண்களும்’ போக்குதல்.” சேது கட்டுவித்தல், இராவணனைக் கொன்று அவன் தம்பிக்கு அரசு ஈதல்,” “ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாது இரங்கி மற்றவர்க்கு இன் அருள் சுரந்து குகனைத் தோழமை கொள்ளல், சுக்ரீவன் வைதேகியைத் தேட நான்கு திசைகட்கும் ஆட்களைப் போக்குதல், வடமதுரை சாளக்கிராமம் துவரை என்ற திவ்விய தேசங்களுடன் அயோத்தியையும் சிந்தித்தல் ஆகியவற்றை நினைந்து உருகுகின்றார் பெரியாழ்வார். அரக்கர்கள் குழமணி தூரம்’ என்ற கூத்தை இராமபிரான் முன்னர் ஆடுவதாக அமைந்த பாசுரத்தில் “அயோத்தி காவலன் தன் சிறுவனை நினைந்து போற்றுகின்றார் திருமங்கை மன்னன்.

[1] [2] [3] [4] [5] [6] [7] [8] [9]

  1. 9. பெரு. திரு. 8:6
  2. 10. பெரு. திரு. 8 : 7
  3. 11. பெரு. திரு. 10: 1
  4. 12. பெரு. திரு. 10 : 8
  5. 13. பெரியாழ், திரு. 3.9:5.
  6. 14. பெரியாழ், திரு. 3.9:8
  7. 15. பெரியாழ், திரு. 3.9:10
  8. 16. பெரியாழ், திரு. 3.10:4
  9. 17. பெரியாழ், திரு. 3.10:8