பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயோத்தி நகர்க் கோமான்

43



‘ஆர்க்கும் இதுநன்று தீதானாலும் நெஞ்சேகீ

பார்க்கும் பலகலையும் பண்ணாதே-சீாக்கும் திருவையோத் திப்புயலைச் சீரியமெஞ் ஞானத் துருவை யோத்திறபொருளையோர்.’ (ஆர்க்கும்-எல்லோருக்கும்; பார்க்கும்-காணப்பெறும்; ப்ண்ண்ாது-கண்டபடி கற்காமல்; அயோத்திப்புயல்ஆயோத்தியில் எழுந்த்ருள்யிருக்கும் காளமேகமாகிய இராமன்; மெஞ்ஞானத்துஉரு - த த் துவ ஞ | ன சொரூபி, ஒத்து-திருமறை; ஒர்-தியானிப்பாயாக.) இப்பாசுரம் நெஞ்சை விளித்துக் கூறுவதாக அமைந் துள்ளது. தருக்கம் வியாகரணம் முதலிய உலகியல் பற்றிய நூல்கள் பலவற்றையும் படித்துப் பழுதே பல காலும் போக்காமல், தத்துவஞான சொரூபியாகிய இறைவனையே தியானம் செய்யுமாறு மனத்தை ஆற்றுப் படுத்துகின்றார். அய்யங்கார் இத்திருப்பாசுரத்தில். இதில் ஆழங்கால் பட்டிருக்கும் நிலையில்,

‘மும்மைசால் உலகுக்கு எல்லாம் மூலமந் திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கு

மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னை’ !தமர்க்கு - அடியார்கட்கு பதம்-செல்வம்; மருந்து

(பிறவிநோய்க்கு) மருந்து.) என்ற கம்பனின் வாக்கு நினைவிற்கு வருகின்றது. இராமனைவிட இராம நாமத்தின் பெருமையினை நன்கு உணர்கின்றோம். அயோத்தியில் மட்டிலும் 2700

18. நூற். திருப். அந். 98 19. கம்ப. கிட்கிந்தை-வாலிவதை- 71