பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 வடநாட்டுத் திருப்பதிகள்

இங்ஙனம் நன்ஞானம் தலை எடுக்கப்பெறறதும ஆழ்வார் நைமிசாரணியத்து எம்பெருமானிடம் அடைக் கலம் புகுகின்றார். பாசுரந்தோறும் ஒரு முறைக்கு ஒன்பது முறையாக வந்துன் திருவடி யடைந்தேன், நைமிசாரணியத்துள் எந்தாய்!” என்று முறையிடு கின்றார்.

ஆழ்வார் அற்ப விஷயங்களைப் பெரியனவாகப் பேசலாமா? என்ற வினா எழுகின்றது. இதற்குப் பெரியவாச்சான் பிள்ளை வேறோர் இடத்தில் அருளிச் செய்திருப்பதை ஈண்டுச் சிந்திப்போம். உலகத்தில் சொல் வன்மையுடையர்கள் பலவகைப்படுவர்; சிலர் உள்ளதை உள்ளபடி பேசுவர்; சிலர் பெரிய பொருள்களைப் பேசத் தொடங்கினாலும் சொல்திறம் போதாமையினால் குறை படப் பேசுவர்; சிலர் நாவீறு உடைமையினால் சிறிய பொருளையும் கணக்கப் பேசுவர். இப்படிப் பேச்சில் பல வகைகள் உண்டு. பேசுவோரின் வாக்குவன்மைக் கேற்பப் பொருள்கள் சிறுத்துப் போவதும் உண்டு; பெருத்துப் போவதும் உண்டு. திருமங்கையாழ்வாரின் சொல்வன்மை புகழ் பெற்றது. அவர் சிறிய பொருள்களைப் பேசும் பொழுதும் பெருக்காறு பெருகுமாப்போலே இருக்குமே யன்றி அப்பொருள்களின் சிறுமை கேற்பச் சிறந்திராது இவர்தம் சொற்போக்கு. ஆகவே, இவர் பேசும் பொருள் சிறுமைப்பட்டது என்பதற்குத் தடை இல்லை; இவர்தம் வாக்கு கம்பீரமாகையால் சிறுபொருளும் கணக்கப் பேசு கின்றது-என்பதாக அருளிச் செய்வர் அந்த உரை மாமன்னன்.

ஆழ்வார் தம் குற்றங்களை அடிக்கடி வெளியிட்டுக் கொள்ளுகிறாரே, மாஞானி எனக் கொண்டாடப் பெறும் அவரிடம் குற்றங்களும் உளவோ? என்றும் சிலர் வினவுவ துண்டு. இதற்குப் பலவிதமான சமாதானங்கள்

5. பெரி. திரு. 6.3:4 (வியாக்கியானம்).