பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 வடநாட்டுத் திருப்பதிகள்

வதரி. வதரிநாதன் எழுந்தருளியிருக்கும் திருமலை முழுதும் வதரியாகும்; அவன் எழுந்தருளியிருக்கும் இடம் வதரிகாச்ரமம் ஆகும். இலந்தைப் பழம் பெரிய பிராட்டி யாரின் திருவுகப்புக்குரியது. திருக்கோயில் முழுவதையும் சூழ்ந்த நிலையில் ஒரு பெரிய இலந்தை மரம் உள்ளதென் றும் கலியுகத்தில் அது மக்கட் கண்கட்குப் புலனாகாது என்றும் சொல்லப் பெறுகின்றது. இந்த மரத்தின் அடி யில்தான் வதரி நாராயணன் சடைமுடி கொண்ட தவசி வடிவில் இரு திருக்கைகளில் திருவாழி திருச்சங்கு தாங்கிய நிலையிலும், மற்ற இரு கைகளில் அபய முத்திரையுடனும், பத்மாசனத்தில் இருந்த திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றான். தாயாரின் திருநாமம் அரவிந்தவல்லி நாச்சியார். இவரை வண்ங்கி பிரம்மாநந்தம் பெறுகின்றோம்; தாயாரின் திருவருளுக் கும் பாத்திரர்களாகின்றோம்.

வதரி நாராயணனின் திருக்கோயிலின் சுற்று 100 அடி நீளமும் 69 அடி அக்லமும் உள்ளது. திருக்கோயில் கண்ணுக்குப் பெருமிதமாகத் தோன்றாவிடினும், பெருங் கற்களாலும், மரத்தாலும், துத்தநாகத் தகட்டாலும் கட்டப் பெற்றுள்ளது. ஆகவே பராமரிப்புச் செலவு சிக் கனமாத் உள்ளது. திருக்கோயிலில் பயணிகளை ஆண் கட்குத் தனியாகவும் பெண்கட்குத் தனியாகவும் “குயூ’’ வரிசையில் தான் விடுகின்றனர். ஒவ்வொருவரும் ஐந்து மணித்துளிகள் நர-நாராயணனைச் சேவிக்கலாம். அதற்குமேல் சேவிக்க விரும்புவோர் மீண்டும் வெளியில் வந்து குயூ வரிசையில் சேர்ந்து போகலாம். அபிஷேகம், அருச்சனை, கர்ப்பூரார்த்தி முதலியவற்றிற்குக் கட்டணம் செலுத்துவ்ோர் கருவறையின் அருகில் அநுமதிக்கப் பெறு கின்றனர். இப்பொழுது உள்ளம் விரும்பும்வரையில் எம் பெருமானைச் சேவித்து மகிழலாம். தலைமை அருச் சகரை இரவல்ஜி என வழங்குகின்றனர். இவர் கேரள நம்பூதிரி அந்தணர்களிடமிருந்தே தேர்ந்தெடுக்கப்