பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4 வடநாட்டுத் திருப்பதிகள்

நிலையையும் சொல்லுவது, பின்னர் இருமுவதும், மீண்டும் சொல்லுவது, இருமுவது, ஆக இந்நிலையுடன் தடியைக் காலாகக் கொண்டு தடுமாறி நடக்கவேண்டிய நிலை (5).

மேலும் கிழத்தனத்தின் நிலையை எடுத்துக் காட்டு கின்றார், கிழத்தனத்தில் ஒரு சொல்லைப் பகர நேர்ந் தால் அது குதலைச் சொல்லாக வெளிப்படும்; அத்துடன் கடமும் வந்து விழும்; கூடவே இருமலும் வந்து சேரும்; இவ்வளவால் உடலும் அதிகமாகச் சோர்வுறும். இந்நிலை யிலும் வாயை மூடிக்கொண்டு சும்மா இராமல் பைத்தி யம் பிடித்தவர்கள் போல் எதையாவது உளறிக் கொட்டு வார்கள். பேச முடியாமல் ஆயாசம் மேலிட்டுவிடும்(6); தண்டு காலூன்றி தளர்ந்து நடந்து கொண்டு தாம் நெடு நாள் பழகின மின்னிடை மடவார் வீதியில் செல்லுங்கால் அவர்கள் பரிகசிப்பார்கள் (7); முற்றமூத்துக்கோல் துணையா முன்னடி நோக்கி வளைந்து சென்று குறடே றும்போதே துரத்தி அடிப்பார்கள்; தெருத்திண்ணையில் உட்காரவும் அதுமதியார்கள்; அப்படிவெருட்டும் போதும் பீளைக்கண்களுடன் பாசம் ஒழியாது மயங்கி நிற்பர் (8); கருமேந்திரியங்களும் ஞானேந்திரியங்களும் சிதிலமான நிலையில் அடியெடுத்து வைக்க முடியாது ஒரு மூலையில் கிடந்து கண்டபடி பிதற்றுவர் (9). இந்த அவல நிலை தோன்றுவதற்கு முன்னர் வதரியை வணங்குமாறு ஆற்றுப்படுத்துகின்றார் ஆழ்வார். இங்ஙனம் வதரிநெடு மாலைப் பாடியும், பாட்டுக்குத் தகுதியாக ஆடியும் அதுபவித்தால் நீள்விசும்பு அருளப்பெறுவர் என்று பலனையும் சொல்லித் தலைக் கட்டுகின்றார். இந்தப் பாசுரங்களில் கிருட்டிணாவதாரத்தில் பேய்ச்சி மூலையூடு உயிரைவற்றவாங்கி உண்டதும் (1), காளையாகிக் கன்று மேய்த்துக் குன்றெடுத்து நின்றதுமான (4) தீரச்செயல் கள் அநுசந்திக்கப் பெறுகின்றன. ஆழ்கடலைக் கடைந்து