பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 வடநாட்டுத் திருப்பதிகள்

நடுங்கும் படியாகப் பிரவகித்துத் தெளிந்த நீரையுடைய கங்கை செல்லும் இடம்(9).

இத்தகைய கங்கைக் கரையின் மீதுள்ள திருக் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் யாவன்? பூமிப் பிராட்டியின் பொருட்டு வராக அவதாரம் எடுத்த வன்; பெரிய பிராட்டியின் பொருட்டு இராமனாக வந்த வன்(1); மாயமானாக வந்த மாரீசனை வானுலகிற்கு அனுப்பிய மாவீரன் (2); இராமாவதாரத்தில் இலங்கை யரசன் இராவணன், அரக்கர் குலம் இவர்கள் யாவரும் ஒழியும்படியாகத் தீரச்செயல்கள் புரிந்தவன்(3);யசோதை வடிவு கொண்டு வந்து தனக்கு நஞ்சூட்டிய முலையைத் தந்த பூதனையை முடித்தவன் (5): நப்பின்னையின் பொருட்டு அசுராவேசமுடைய ஏழு எருதுகளை அடக்கி யவன்(6), தான் கடல்கடைந்த காலத்தில் கடலினின்றும் வெளிப்பட்ட ஐராவதம், அமிர்தம் ஆகியவற்றை இந்திரனுக்கு ஈந்து தேவர்கட்குத் தலைவனாயிருக்கும் தன்மையையும் அருளியவன்(7): இப்பெருமானே மாரீசன் மீது வரிசிலை வளைத்துக் கணை தொடுத்தவன்; இரணிய னின் மார்பைக் கீண்டவன்; நான்முகக் கடவுள் சிவன்மீது சீறி அவனுக்குக் கொடுத்த வெந்திறல் சாபத்தைத் தவிர்த். தவன்(8): இத்தகைய எம்பெருமான் தொண்டர்களின் பிறவிப் பிணியைப் போக்கி வீடுபேற்றை அருளுபவன்தொழுதெழு தொண்டர்கள் தமக்கு, பிணியொழித்து அமரர் பெருவிசும்பு அருளும் பேரருளாளன்': மனமே, அவனே உன்னுடைய உறுதிப் பொருளாகும்” என்று மனத்திற்கு உபதேசம் செய்கின்றார் ஆழ்வார் (4): இந்த எம்பெருமானைப் பற்றிய இத் திருப்பாசுரங்களை ஒதுபவர்கள் மண்ணுலகை நெடுநாள் ஆண்டும் பிரம்ம பதத்தை நிர்வகித்தும், அதன் பிறகு நித்திய சூரிகளுடன் ஒருங்கே இருப்பர் (10).

இவ்விடத்தில் ஓர் இதிகாசம். நஞ்சீயர் ஒருநாள் பட்டரை நோக்கி, ஏரார் இன்னிசை மாலை வல்லார்