பக்கம்:வடநாட்டுத் திருப்பதிகள்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதரிநாதன்-நரதாராயணன் 77.

இருடிகேசன் அடியாரே, வைகுந்தம் ஏறுவரே என்று பரமபுருஷார்த்தத்தைச் சொல்ல வேண்டியிருக்க, இருங் கடல் உலகமாள்வதான தாழ்ந்த பலனைச் சொல்லு வதேன்?’ என்றார். அதற்குப் பட்டர், ரசோக்தியாக, ‘திருமங்கையாழ்வார் அவதரித்த பின்பு தியாஜ்யமான (விலக்கப்படத்தக்க) ஐசுவரியமும், பரமபுருஷார்த்தமாய் விட்டது காணும். பணமுள்ளவிடங்களில் சென்று கொள்ளையடித்து பகவத் பாகவத கைங்கரியங்கள் பண்ணுகிறவராகையாலே ஹேயமான (விடத்தகுந்த) ஐசுவரியமும் இவ்வாழ்வார் திருவுள்ளத்தால் உத்தேச்ய மாய் (கருத்தாய்) விட்டதிறே’ என்றாராம். யார் யார் எத்தெந்தப் பலன்களை விரும்பினாலும் அந்தந்தப் பலன் கள் இவ்வருளிச் செயல் மூலமாகக் கிடைக்கும் என்பது

இதன் உண்மைப் பொருளாகும்.

நர-நாராயணன் சந்நிதியில் இந்த இரு திருமொழி களையும் மிடற்றொலியுடன் ஓதி உளங்கரைந்த நிலை யில் திவ்விய கவியின் திருப்பாசுரம் நினைவிற்கு வர அதனையும் ஒதுகின்றோம்.

“தாட்கு அடிமை என்றுதமை

உணரார்க்கு எட்டெழுத்தும் கேட்கவெளி யிட்டருளும்

கேசவனை - வேட்கையொடு போவதுஅரி தானாலும்

போய்த்தொழுவோம் கெஞ்சமே மாவதரி யாச்சிர

மத்து [தாட்கு-திருவடிகட்கு அடிமை-ஆடிமைப்பட்டவர்; தம்ை-ஆன்ம சொரூபத்தை: கேசவன்-திருமால்; வேட்கை-பக்தி)

15. நூற். திருப். அந்-191