பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறவு மாறிற்று. ஆளுபவராகவும் g ஆளப்பட்டவராகவும் 1850 அளவில் வடமேற்கு ஆப்பிரிக்கா பிரெஞ்சுக் குடியேற்ற நாடாயிற்று. பிரெஞ்சுக்காரர், நூறாயிரக் கணக்கில் இந்த நாடுகளின் கரையோரப் பகுதிகளில் குடியேறினர்: பருவநிலையும் அவர்களுக்கு ஏற்றதாக இருந்தது. அரசாங்க அலுவல் பார்த்தும் வெளிநாடு களுடன் வியாபாரம் செய்தும் அவர்கள் வளமாக வாழ்ந்தனர். வாழ்க்கைச் செலவும் பிரான்சைவிடக் குறைவாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஆட்சி பிரெஞ்சுக்காரரிட மிருந்ததால், பிரெஞ்சுக்காரன் ஒவ்வொருவனும் செல்வாக்குப் பெற்றான். உள்நாட்டு மக்களால் மதிக்கப்பட்டான். . நம் நாட்டிலும்கூட இத்தகைய சூழல் நிலவுகிறது. குறிப்பிட்ட ஓரினத்தைச் சேர்ந்தவர் ஓர் இராச்சிய முதலமைச்சராய் இருந்தபோது, அவ்வினத்தவர் மாவட்ட ஆட்சி அலுவலகங்களில் உறவு கொண் டாடினர். அவர்கள் வைத்ததே சட்டமாக இருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் 1939-இல் இரண்டாவது உலகப் போர் தொடங் கிற்று. அதுவரை மேலே குறிப்பிட்ட சில நாடுகளுடன் தான் வட ஆப்பிரிக்காவுக்குத் தொடர்பு இருந்தது. கடற்படை, விமானப்படைத் தளங்கள் இந்த நாடு களில் ஏற்பட்டதையொட்டி அமெரிக்காவுடனும் வெளி உலகத்துடனும் வட ஆப்பிரிக்கர் தொடர்பு கொள்ளலாயினர். புதியதொரு கண்ணோட்டம் ஏற்பட்டது. மக்கள் தொகையும் பெருகிற்று. கல்வியின் தேவையை மக்கள் உணர்ந்தனர். ஐரோப்பியர்க்கே