பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 உரியன என்று கரு தப்பட்ட சுகாதார வசதிகள் எல்லா மக்களுக்கும் தேவை என்ற கருத்துப் பரவிற்று. நாட்டு உணர்ச்சியும் பெருகியது. பொருளாதாரத் துறையிலும் வளர்ச்சி உண் டாயிற்று. 'நம் நாட்டு வணிகத்தாலும் மூலப்பொருள் களாலும் நாமே பயனடைய வேண்டும்' என்ற எண்ணம் ஏற்றம்பெற்றது. இரண்டாம் உலகப் போரால் பிரான்சுக்குப் பல இன்னல்கள் உண்டாயின. 1945-இல் அரபுலீக் அமைக்கப்பட்டது. சிரியா, லெபனான், லிபியா போன்ற நாடுகளின் எழுச்சி, அரபுத் தலைவர்களின் விடு தலை ஆகியவற்றால் சுதந்திரச் சுடர் கொழுந்துவிட்டு எரியலாயிற்று. வட ஆப்பிரிக்காவில் குடியேறி, வசதியாக வாழ்ந்துவந்த பிரெஞ்சுக்காரர் தங்களுடைய தனிச் சலுகைகளும் உரிமைகளும் பறிபோகக்கூடுமே என்று ஏங்கினர். அந்த ஏக்கத்தால், அரசியல் சீர்திருத்தங் களுக்கு முட்டுக்கட்டை போட முனைந்தனர். பிரெஞ்சு ஆட்சியின்மீது ஒருபுறமும் குடியேறிய பிரெஞ்சுக் காரர்மீது மற்றொருபுறமாக ஆப்பிரிக்க மக்கள் இரு முனைப் போராட்டம் தொடங்கினர். எகிப்தின் தலைநகராய கெய்ரோவில், பிரெஞ்சு வட ஆப்பிரிக்க நாடுகளிலுள்ள தேசியத் தலைவர்கள் 1954-இல் ஒருங்கு கூடினர். விடுதலைக் குழு ஒன்றை நிறுவினர். இந்த நாடுகளின் விடுதலைக்குப் பாடு படவும், பிரான்சுடன் கொண்டிருந்த உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவும் வட ஆப்பிரிக்காவின் நலம் கருதிப் பொதுவான செயல்கள் பலவற்றை மேற் கொள்ளவும் இத்தலைவர்கள் உறுதி பூண்டனர்.