பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 இவர்களுடைய இயக்கத்துக்கு உறுதுணையாக இருப்பதென்று பாண்டூங்கில் கூடிய ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு 1955-இல் முடிவு செய்தது. இந்த நாடுகள் ஆப்பிரிக்காவிலுள்ள பிற நாடு களைப்போல எளிதில் சுதந்திரம் அடைந்துவிடவும் இல்லை. உள்நாட்டுக் கலகங்கள், ஓயாத குண்டுவீச்சு, பல்லாயிரவர் உயிர் இழப்பு, ஐக்கிய நாடுகள் குழுவின் ஆய்வு, பரிந்துரை. இத்தகைய நிகழ்ச்சிகளுக்குப் பிறகு தான் இந்த நாடுகள் விடுதலை பெற்றன. விடுதலைக்குப்பின் விடுதலை பெற்ற பிறகு இந்தியாவும், ஆசியா விலும் ஆப்பிரிக்காவிலும் உள்ள பல நாடுகளும் எண்ணற்ற சிக்கல்களைத் தீர்க்கவேண்டிய நிலையி லுள்ளன. உள்நாட்டுக் குழப்பம். மக்கட் பெருக்கம். அரசினரின் வரவு செலவில் பற்றாக்குறை. பொருளா தார வளர்ச்சியில் வேகமின்மை. வடமேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இத்தகைய இடையூறுகள் இல்லை. சுதந்திரம் பெற்ற அதே காலத்தில் இங்கு எண்ணெய்க் கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. பாலைவனங்கள் வனங்களாகி வருகின்றன. சோலை