பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 கவிஞர்களாலும் கடற்கொள்ளைக்காரர்களாலும் கவினுறு நாடுகளை விழைவாராலும் பாராட்டப்பெற்ற நாடு மொராக்கோ. பழமையும் புதுமையும் கலந்தது மொராக்கோ. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் நிலவிய சந்தைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை இன்று காணலாம். 13, 14-ஆம் நூற்றாண்டு நிகழ்ச்சிகளை நினைவூட்டும் கோட்டைகளின் அருகே இன்றைய மாபெரும் ஆகாய விமான நிலையங்கள் உள்ளன. காசாபிளான்கா: நகரங்கள் முற்காலத்திய படைவீரர்களையும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கப்பல்களையும் அடுத் தடுத்துக் காணக்கூடிய இடம் காசாபிளான் கா துறைமுகம். ஆங்கிலேயருக்கு பம்பாய் இந்தியாவின் தலைவாயிலாக இருப்பதுபோல காசாபிளான்கா பிரெஞ்சுக்காரருக்கு மொராக்கோவின் தலைவாயிலாக இருக்கிறது. காசாபிளான்கா என்பது போர்த்துக் கீசியர் கொடுத்த பெயர். அதன் பொருள் வெள்ளை மாளிகை. இந்நகரத்து மாடமாளிகைகள் வெண்மை நிறமுடையவை. அகல்விளக்குகளுடைய சாலைகள். கவர்ச்சியான கடைகள். உள்ளத்தை ஈர்க்கும் உணவுவிடுதிகள். மலர் வகைகள் அனைத்தும் உடைய பூங்காக்கள். வளமாக வாழ என்னென்ன வசதி தேவையோ அத்தனையும் உடைய மாளிகைகள். இவையுடையது காசாபிளான்கா. திராட்சைத் தோட்டங்களும் வாழைத் தோட்டங் பல நூறு களும் நிறைந்தது மொராக்கோ. மக்களில்