பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஓவியர்களும் சிற்பிகளும் உள்ளனர். சிற்றூர்களில் மக்கள் உடுக்கும் உடையிலும் வாழும் வீடுகளிலும் அவர்கள் நடத்தும் கடைகளிலும் பல வண்ணங்கள் இரண்டறக் கலந்து வானவில்லாகத் தோன்றுகிறது. மரக்கேஷ் : மரக்கேஷ், இந்த நாட்டின் மற்றொரு நகரம். பழமையின் வடிவமான இங்குள்ள பாஹியா அரண் மனை. 19ஆம் நூற்றாண்டில் சுல்தானின் இல்லமாக இருந்தது. பளிங்கு மண்டபங்களும் நீரூற்றுக்களும் உடைய இம்மாளிகை, மூர் கட்டிடக்கலையில் அமைக் கப்பட்டது. மரக்கேஷில் பெரிய மசூதியும் கோட்டையும் ரோமாபுரி ஆட்சியிலும் அராபியர் ஆட்சியிலும் தொடங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புடைய கல்வி நிலையங்களும் ஆட்டோமன் அரசர்களின் நினைவுச் சின்னங்களும் உள்ளன. பெஜ்: பெஜ் என்னும் நகரம் 14ஆம் நூற்றாண்டில் தோன்றியது. முஸ்லிம் பண்பாட்டுக்கு அறிகுறியாக விளங்கும் நகரங்கள் என்று உலகெங்கும் குறிப்பிடத் தக்கவற்றுள் இந்நகரம் ஒன்று. இஸ்லாமியக் கல்வியின் இருப்பிடமாக இருப்பது இந்நகரத்தின் சிறப்பு. பள்ளத்தாக்கில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தால் இந்நகரம் உலக அறிஞர் மதிக்கத்தக்கவாறு உயரத்தில் இருக்கிறது. மெக்னேஸ்: மெக்னேஸ் என்று ஒரு நகரம் உளது. இது 18ஆம் நூற்றாண்டில் உருவானது. பிரான்சிலுள்ள வெர்சே