பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 இலங்கையில் கொழும்பு மாநகரில் புதிய சோனகத் தெருவும் பழைய சோனகத் தெருவும் உள்ளன. சென்னை மாநகரில் இவர்களுடைய வணிகத் தொடர் புக்கும் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டாக மூர் அங்காடி (மூர்மார்க்கெட்)யும், மண்ணடிப் பகுதியில் மூர் சந்தும் இருக்கின்றன. மூர் இனத்தவரின் நாக ரிகத்துக்கும் கட்டிடக்கலைக்கும் நிலையான காட்சிக் கூடமாய் ரபாட் என்னும் நகரம் அமைந்திருக்கிறது. இதுவே மொராக்கோவின் தலைநகரம். மூர்கள் நிறைந்த நாடு என்பதாலேயே, மொராக்கோ என்ற பெயர் ஏற்பட்டது. சோனகம் என்ற சொல் மேற்கு ஆசிய நாடுகளின் முஸ்லீம்களையும் அவர்தம் மொழியையும் குறிக்கப் பழந்தமிழரால் பயன்படுத்தப்பட்டது. அங்கம் வங்கம் கலிங்கம் கௌசிகம் சிந்து சோனகம் திராவிடம் சிங்களம்....... என்பது திவாகர நூற்பா. ஜிப்ரால்ட்டர் ஜிப்ரால்ட்டர் என்னும் குறுகலான நீர்வழி, மொராக்கோ எல்லையில் இருக்கிறது. இது அட் லாண்டிக் பெருங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கிறது. ஸ்பெயினை மொராக்கோவிடமிருந்தும் ஆப்பிரிக்காவை ஐரோப்பாவிடமிருந்தும் பிரிப்பதும் இந்த நீர்வழிதான். ஜிப்ரால்ட்டர் என்னும் மலையும் இந்த நாட்டில் இருக்கிறது. உலகத்து மலைகளில் இந்த மலையே உறுதி யானது என்பர். இக்காரணத்தால், விடா முயற்சியும் மன உறுதியும் உடையவரை ஜிப்ரால்ட்டர் மலையுடன்