பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 மொராக்கோவில் காணத் தக்கவை: மன்னர்கள் வாழ்ந்த மாளிகைகள், அத்திமரங்கள், அலுமினியத் தால் செய்த மேஜை நாற்காலிகள், ஓவியக் காட்சிக் கூடங்கள். ஆட்சிப் பிரிவுகள் 20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்த நாடு மூன்று பகுதிகளாக ஆளப்பெற்று வந்தது. அவை யாவன; பிரெஞ்சு மொராக்கோ, ஸ்பானிஷ் மொராக்கோ, டான்ஜியர் மொராக்கோ. இவற்றுள் பிரெஞ்சு மொராக்கோ தான் பெரிய பகுதி. வளமான பகுதியும் ஆகும். பிற இரண்டும் சிறு பகுதிகள். அவற்றைப் பற்றி சுருக்கமாக பின்னர் கூறுவோம். வெளிநாட்டார் மொராக்கோவில் அயல் நாட்டினராகப் பிரெஞ் சுக்காரர் 170 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் செல்வமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர். தொழிற்சாலைகளிலும் தோட்டப் பண்ணைகளிலும் இவர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். மொராக்கோ சுதந்திரம் அடைந்த பிறகு இவர்களுடைய வாக்குக் குறைந்தாலும் செல்வம் குறையவில்லை. செல் 1950- இல் யூதர் ஒருலட்சத்து அறுபதாயிரம் பேர் இருந்தனர். கூரிய அறிவு, மனஉறுதி, கட்டுப்பாடு, உழைப்பு, உலகெங்கும் தொடர்பு, தங்களுடைய பழ மையிலும் பெருமையிலும் அசையாத நம்பிக்கை, சனிக்கிழமையைப் புனித நாளாகக் கொள்ளுவது,