பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 இக் சமமாக சுதந்திரம் கேட்பதும் பரவிவிட்டன. காரணங்களாலேயே ஐரோப்பியர் மீது மொராக்கோ ஆடவர்க்கு வெறுப்புணர்ச்சி ஏற்பட்டது. வேளாண்மை வேளாண்மையே இந்த நாட்டின் பெரிய தொழில். மக்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வேளாண்மை யில் ஈடுபட்டிருக்கின்றனர். கோதுமையும் நவ தானியங்களும். பயிரிடப் படுகின்றன. ஆலிவ் மரம் பயிரிடுவது பெரிய தோட் டத் தொழிலாக வளர்ந்திருக்கிறது. பிற விளைபொருள்கள் பேரீச்சம் பழம், பருத்தி, சிட்ரஸ்பழம், வா தாங்கொட்டை, பட்டாணி வகைகள் சோளம், பார்லி, லின்சீடு எண்ணெய். கால்நடை வளர்த்தல் பெரிய அளவில் நடைபெறு கிறது. இதையொட்டியே கம்பள நெசவுத் தொழிலும் பலவகைத் தோலால் மென்மையான பொருள்களைச் செய்யும் கலைகளும் வளர்ந்திருக்கின்றன. மீன் பிடித்தல் இந்த நாட்டின் சிறப்பான தொழில். சார்டின் என்னும் ஒருவகை மீன், தகரங் களில் அடைத்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீனை இந்த நாட்டில் கடல் வாழைக்காய் என்றுதான் சொல் கிறார்கள். முயல் இறைச்சிகூட சைவ உணவாகத்தான் கருதப்படுகிறது. முயல் இறைச்சிக்குத் துணை உணவாக ஆலிவ் பழத்தையும் உட்கொள்வர். இந்த நாட்டில் மூன்றில் ஒரு பகுதியில் ஆலிவ் மரங்கள் உள்ளன. இந்த மரத்தில் உண்டாகும் ஆலிவ் பழங்களைச் சாப்பிடலாம். பழுப்பதற்குமுன் பிடுங்கி அந்தக் காயைக் காய்ச்சி எண்ணெய் எடுக்கலாம்.