பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 டான்ஜியர் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து வந்தது. முதல் உலகப் போருக்குப் பிறகு அது சுங்கவரியில்லா த துறைமுகமாகவும் பல நாடுகளின் கூட்டாட்சிக்கு உட் பட்ட பகுதியாயும் ஆயிற்று. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின், பெல்ஜியம், நெதர்லன்ட்ஸ், இத்தாலி, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் கூட்டாக இந்நகரில் ஆட்சி செலுத்தின டான்ஜியரில் இருந்த அந்த நாடுகளின் தூதர்கள் சேர்ந்து ஆட்சிக்குழுவை அமைத்துக் கொண்டனர். ஆட்சி அலுவலராக மாறி மாறி ஒவ்வொரு நாட்ட வரும் பணி புரிந்தனர். போலீஸ் படை பெல்ஜிய நாட்டாரால் நிர்வகிக்கப் பெற்றது. ஆயுதம் தாங்கிய போலீஸ் படையில் ஸ்பானியர்கள் இருந்தார்கள். ஆங்கிலேயருடைய நாணயம் புழக்கத்திலிருந்தது. இத்தாலியர்கள் நீதிபதிக நீதிபதிகளாக இருந்தார்கள். அலுவலர்களாகவும் வியாபாரிகளாகவும் 20,000 யூதர் கள் இருந்தனர். டான்ஜியரில் எந்தவிதமான வரியும் விதிக்கப்படவில்லை. உலகத்துப் பணக்காரர் பலர் இங்கு வந்து குடியேறினர். எந்த நாட்டுக்காரரும் வாழவும் குடியுரிமை பெறவும் பாங்கு திறக்கவும் உரிமை இருந்தது. அயல் நாட்டு நாணயங்களில் கள்ளச் சந்தை நடந்தது. வரி ஏய்ப்பவர்கள், கள்ளக்கடத்தல் காரர்கள், ஒற்றர்கள் ஆகியோர் நிறைந்திருந்தார்கள். இதனால் இங்கே பணம் புரண்டது. கேளிக்கை வாழ்வு பெருத்தது. டான்ஜியர், மொராக்கோவின் ஒரு பகுதியாகி பிறகு பொலிவு இழந்து விட்டது. அதன் தனித் தன்மை மறைந்துவிட்டது. எல்லா நகரங்களைப் போல அதுவும் பத்தோடு பதினொன்றாக ஒரு சாதா ரண நகரமாக மாறிவிட்டது.