பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அல்ஜீரியா வட ஆப்பிரிக்காவில் நடு நாயகமாக விளங்கும் நாடு அல்ஜீரியா. மொராக்கோ அல்ஜீரியாவின் வலது காது போல வும் டுனீசியா அந்த நாட்டின் இடது காது போலவும் அமைந்திருக்கின்றன. மொராக்கோவைப்போல அல்ஜீரியாவுக்கு நீண்ட சுதந்திர வரலாறு இல்லை. இந்த நாட்டின் கடலோரப் பகுதி நெடுங்காலமாக ஸ்பெயின் நாட்டின் ஆதிக் கத்தில் இருந்திருக்கிறது. சிதறுண்ட பலபகுதிகளின் ஒன்றியமாக அல்ஜீரியா விளங்குகிறது. சிறுபான்மையான பல இனத்தவர் இங்கு வாழ்கிறார்கள். இந்த இனங்கள் எத்தனை? இவ வற்றின் தலைவர் எத்தனை பேர்? என்பதை விரைவில் கணக்கெடுத்து விடமுடியாது. அல்ஜீரியாவில் வாழும் பிரெஞ்சுக்காரர் தொகை 12 லட்சம். பிரெஞ்சுப் பாராளுமன்றத்திலும் அல்ஜீரி யாவுக்கு பிரதிநிதித்துவம் இருந்தது. இந்த நாடு என் றென்றும் பிரான்சின் ஒரு பகுதியாக இருக்குமென்று பிரெஞ்சுக்காரர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். சுதந்திரம் கேட்பதற்கு அல்ஜீரியர்களுக்கு உரிமை இல்லை என்றும் பிரெஞ்சுக்காரர்கள் சொன்னார்கள்.