பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மன்றத்திற்கு வாக்களிக்கும் உரிமையும் பிரான்சில் சொத்து வாங்குவதற்கும் வாழுவதற்கும் உரிமை களும் அவர்களுக்கு மட்டுமே இருந்தது. வரலாறு 16-ஆம் நூற்றாண்டுவரை அல்ஜீரியாவின் வரலாறு குறிப்பிடக் கூடியதாக இல்லை. அந்த நூற்றாண்டில் துருக்கிப் பேரரசின் ஆட்சி அல்ஜீரியாவில் நடந்தது. அப்போது பிரெஞ்சு வணிகர் அல்ஜீரியாவுக்கு வந்தனர். அவர்கள் அடிமை வியாபாரம் செய்தனர் அல்லது கப்பற் கொள்ளையில் ஈடுபட்டனர். படிப்படியாகப் பிரெஞ்சுக்காரர் செல்வாக்கு அல்ஜீரியாவில் பரவியது. ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற விரும்பி னார்கள். இந்த நிலையில் துருக்கிப் பேரரசின் கவர்னர் அல்ஜீரியாவிலுள்ள பிரெஞ்சுப் பிரதிநிதியைக் கன்னத் தில் அறைந்தார். நொண்டிக் கழுதைக்கு சறுக்கினது சாக்கு என்பார்கள். கன்னத்தில் அறைந்ததைக் காரணமாகக் காட்டி பிரெஞ்சுக்காரர்கள் 1830-ல் அல்ஜீரியாவில் தங்களுடைய ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு பிரெஞ் சுக்காரர் அல்ஜீரியாவின் கடலோரப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். பிரான்சின் தென்பகுதிலும் கார்சிகாத் தீவிலும் வாழ்ந்த பிரெஞ்சுக்காரர்கள் தான் அல்ஜீரியாவில் குடியேறினார்கள். இரண்டாம் உலகப் போரில் அல்ஜீரியாவின் கேந்திரமான அமைப்பு மேலைநாட்டாரின் கவனத்தை ஈர்த்தது.1942-ல் அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் அல்ஜீரியாவைப் பிடித்துக்கொண்டன. பிரான்சு அப்போது ஜெர்மனியின் ஆட்சிக்கு உட்பட்