பக்கம்:வடமேற்கு ஆப்பிரிக்கா.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 டிருந்தது. பிரான்சை விடுவிக்கும் தலைவராகத் தளபதி டி கால் விளங்கினார். இயக்கத்தின் டி கால் ஒரு போட்டி அரசாங்கம் அமைத்து அல்ஜீரி யாவையும் பிரெஞ்சு ஆட்சியிலிருந்த ஏனைய நாடு களையும் ஆண்டார். அவருடைய அலுவலகம் முதல் 1944 வரை அல்ஜீரியாவில் இருந்தது. விடுதலைப் போர் 1942 1937-ல் அல்ஜீரிய மக்கள் கட்சி உருவாயிற்று. இக்கட்சி பல ஆண்டுகள் மறைமுகமாக இயங்கிற்று. ஆசிய நாடுகள் விடுதலை அடைந்த பிறகு மறை முகமான இயக்கம் மாறிற்று. 1954-ல் வெளிப்படையான இயக்கமாக பெரிய அளவில் ஒரு கலகம் ஏற்பட்டது, ஆயுதம் தாங்கிய போராட்டமும் நடந்த வண்ணமாக இருந்தது. 1955-ல் அல்ஜீரியாவைப்பற்றி ஐக்கிய நாடுகள் அவை விவாதித்தது. அல்ஜீரியாவின் விடுதலை இயக் கத்தை ஆதரித்து இந்தியா ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தது. இந்த முடிவை ஐ.நா. அவை ஒரு மனமாக ஏற்றது. 1956-ல் இந்தியப் பாராளுமன்றத்தில் அல்ஜீரியா வைப்பற்றி ஜவஹர்லால் நேரு பேசினார். அல்ஜீரியக் கிளர்ச்சிக்கு ஆதரவு தருவதாக அவர் உறுதியளித் தார். சில மா தங்களுக்குப் பிறகு ஜவஹர்லால் நேருவும் எகிப்தின் தலைவர் நாசரும் யுகோசுலவியாவின் தலைவர் டிட்டோவும் இதுபோன்ற கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். அல்ஜீரியச் சுதந்திரப் போரில் பத்து லட்சம் பேர் இறந்தனர். வேறு எந்த ஆப்பிரிக்க நாடும் விடுதலை அடைய இவ்வளவு தியாகம் செய்யவில்லை,