பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளியே போகாதபடி துவாகபாலகர் மாதிரி காவல் காததாா முத்து. - . - புள்ளி சுப்புடு விசிறியால் வீசி, விசி வாசனையைக் கலைத்துவிட்டுக் கொண்டிருந்தார். வீட்டுக்கார அம்மாள் உட்கார்ந்திருந்த கவுண்ட்டர் வரை போய் நின்று அங்கு சாம்பார் வாசனை வருகிறதா என்று மோப்பம் பிடித்துப் பார்த்தார் புள்ளி. வீட்டுக்கார அம்மாவோடு பேச்சுக் கொடுத்து, அவள் கவனத்தை திசை திருப்பினாள் கோமோச்சி. முத்து ஊதுவத்தி கொளுத்தி வைத்து சாம்பார் வாசனையை அதில் மறைக்கப் பார்த்தார். - - சாம்பாரைக் கீழே இறக்கி வைக்கிறபோது வீடு பூராவும் வாசனை அடர்த்தியாய்ப் பரவிவிட்டது! வீட்டுக்கார அம்மாள் மூக்கை உறிஞ்சி உறிஞ்சி, 'அதென்ன வாசனை! எங்கிருந்து வருகிறது?" என்று யோசித்தாள். சந்தேகத்துடன் மேலே இவர்கள் தங்கியிருந்த அறைக்கு விரைந்து சென்று பார்த்தாள். "ஐயோ, வீட்டுக்கார அம்மாள்! தெரிஞ்சுபோச்சு போலிருக்கு என்ன ஆகப் போகுதோ!' என்று எல்லோரும் பயந்துபோய் திருட்டுமுழி முழித்தார்கள். - அந்த அம்மாள் இங்கே சமையல் செய்தீர் களா?' என்று அதிகாரமாய்க் கேட்டாள். x. "ஆமாம்" என்று ஒப்புக்கொண்டார் புள்ளி பயந்தபடி, என்ன பண்ணிங்க?" 'ஆனியன் சாம்பார்" என்று கோமோச்சி உண்மையைச் சொல்ல, "அப்படியா! வாசனை பிரமாதம் காக்ல, ஜலம் ஊறு து. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுப்பீங்களா?' என்று கேட்டாள். . 'அம்மாடியோ! தப்பிச்சோம்' என்று எண்ணிக்கொண்ட மனோரமா, ஒரு பாத்திரம் நிறைய சாம்பார் எடுத்துக் கொடுத்தனுப்பினார். அங்கேயே ஒரு ஸ்பூன் சாம்பாரை வாயில் ஊற்றிச் சாப்பிட்டுப் பார்த்த வீட்டுக்காரி ரொம்ப டேஸ்ட்டா யிருக்கு வெரிகுட் தினமும் நீங்க இங்கேயே சமையல் செஞ்சுக்குங்க. எனக்கும் கொஞ்சம் சாம்பார் கொடுத்துட்டுப் போங்க. ஆமாம்!' என்று ஒரு உத்தரவுபோல் சொல்லிவிட்டுப் போனாள். - - . - 27.