பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரெஸ்டாரண்ட், ச்ேசல் குள்ம், கோயில், ஸஇர்ன், லாண்ட்ரி, இடுகாடு எல்லாமே இருக்கு' என்றார் மனோரம்ா. - காங்க கின் லா பக்கம் நடந்தே போயிருந்தோம். மெட்ராலாக்கும் டோக்கியோவுக்கும் கொஞ்சம்தான் வித்தியாசம். இங்கே எருமை மாடு, சினிமா போஸ்டர், ஹாரன் சத்தம் இந்த மூணும் கிடையாது. ஜனங்க நடுரோட்ல கடக்கறதில்லை. அவ்வளவுதான்' என்றார் கன்னன். 'கம் ஊரில் ஹாரன்.அடிச்சாக் கூட ஒதுங்கமாட்டாங்களே, எருமை மாடு மாதிரி நடுரோட்லயே நிப்பாங்களே!' என்றார் முத்து. "எருமைப் பால் காப்பிதானே சாப்பிடறாங்க. அவங்க புத்தி வேற எப்படி இருக்கும்?' என்றார் நன்னன். - அரண்மனை கிழக்கு வாசலில் ஷா மியானா போட்டதும் திருவிழாக் களை கட்டிவிட்டது. வெளி ஆட்கள் யாரும் உள்ளே வாதபடி மைதானம் முழுவதையும் பட்டி போல் அடைத்து கயிறு வேலி போட்டுவிட்டார்கள். ஜப்பான் போலீஸார் அங்கங்கே ஒலிபெருக்கிக் குழாய்களைக் கையில் வைத்துக்கொண்டு வண்டிகள் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்தார்கள். 'l speak English என்ற எழுத்துக்களைச் சட்டையில் . அணிந்திருந்த பெண் கய்டுகளைச் சுற்றி டுரிஸ்ட்டுகள் மொய்த்துக் கொண்டிருந்தனர். தண்ணீர் இறைக்கும் மோட்டார் வண்டிகள் கெருவெங்கும் கழுவி ஏற்கெனவே சத்தமாயிருந்த வீதிகளை மேலும் சுத்தப் படுத்திவிட்டுப் போயின. r - ரங்கோலி சாந்தா நாராயணன் குழுவினர் இரவெல்லாம் கண் விழித்து கிழக்கு வாசல் முழுதும் திருவாருர்த் தேர், பூம்புகார், வள்ளுவர் கோட்டம், மாமல்லபுரம் கற்கோயில், கடராஜர், விநாயகர் உருவங்களைக் கோலச் சித்திரங்களாக வரைந்தபோது, டெலிவிஷன் காமிராக்களும் போட்டோகிராபர் களும் அந்தக் காட்சியைப் படமாக்கி ஒளிபரப்பிக் கொண் டிருந்தனர். - . . . . . . • தேருக்கு நாலு பக்கங்களிலும் காலு குறள்கள் எழுதி வைத்தால் ரொம்ப கன்ன்ாயிருக்கும்" என்றார் முத்து. - "அந்த காலு குறளையும் கன்னன் எழுதிக் கொடுத்தால், அது கன்னனா யிருக்கும்" என்று ஜோக் அடித்தார் மனோரமா, 42