பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழக்கம்போல் ஸ்னாய் பில்டிங் வாசலில் சக்தித்தார்கள். அங்கிருந்து ஸ்ப்வேயில் இறங்கி ரயில் பிடித்து உயினோ போய்ச் சேர்ந்தார்கள். அங்கே தேரையும் தேர்ச் சக்கரங்களையும் ஜார்ஜ் உன்னிப்பாய் கவனித்துப் பார்த்த செய்தி பழைய கதை. × அன்று ஜார்ஜ், ஓட்டலுக்குத் திரும்பியதும் அந்த விளிடிங் கார்டை தன் டயரிக்குள் யார் வைத்திருப்பார்கள்?' என்று மண்டையைக் குழப்பிக் கொண்டான் : அந்த மர்மம் அவனை இரவு முழுதும் துரங்கவிடவில்லை. அந்த விளமிடிங் கார்டில் இருந்த டெலிபோன் கம்பருக்குப் போன் செய்ய நினைத்தான். ரிஸ்வேரை எடுத்தான். - சற்று யோசித்துவிட்டு மறுபடியும் வைத்துவிட்டான். 'பென்னட் வரட்டும். அவன் யோசனைப்படி செய்யலாம்' என்று தீர்மானித்தான். 46