பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鐘 7 கொடித்த விழா நிகழ்ச்சிக்கு காலை ஒன்பது மணிக்கு கேரம் குறிப்பிட்டிருந்ததால் விழாவேந்தன் இரவெல்லாம் கண்விழித்து அரண்மனை கிழக்கு வாசலில் பெரிய மாகாடுபோல் ஷாமியானா போட்டு, 'இகபானா' அலங்காரங்களுடன் மேடை அமைத்திருக்தார். சக்ரவர்த்தி குடும்பத்தார், ஜப்பான் காட்டுப் பிரதமர், டோக்கியோ சகர மேயர், பார்லிமெண்ட் அங்கத்தினர்கள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், வி.ஐ.பிக்கள், வெளிநாட்டு விருந்தாளிகள் அத்தனை பேரும் அவரவர்கள் இடத்தில் அமர, சக்ரவர்த்தியின் காரியதரிசி யோஷின்ாரியும் விழாவேந்தன் முத்துவும் 'ஆச்சா, ஆச்சா' என்று குறுக்கும் கெடுக்கும் பறந்துகொண்டிருந்தார்கள். சக்ரவர்த்தி தம்பதியர் வரவை அத்தனை பேரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாமகிரிப் பேட்டை கிருஷ்ணன் மேடையில் அமர்ந்து நாதஸ்வரம் வாசிக்க, அந்த இசையின் கம்பீர முழக்கம் டோக்கியோவையே காத - வெள்ளத்தில் ஆழ்த்தியது. - மேட்ையில் ஒரு பக்க ம் விநாயகர் சிலையும் இன்னொரு பக்கம் நடராஜர் விக்ரகமும் வைத்திருந்தார் முத்து. - சக்ரவர்த்தியும் மகாராணியும் வந்ததும், கிருவாரூர் ஒதுவார்கள் கணிரென்ற குரலில் இறைவணக்கம் பாடி முடித்ததும் "பூஜை ஆரம்பிக்கலாமா?' என்று விழா வேந்தன் கேட்க, கோபாலகிருஷ்ணன் தலையசைத்தார். ஒரு தட்டில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம் இவற்றை எடுத்து வைத்தார் மனோரமா. அவர் உடுத்தியிருந்த காஞ்சீபுரம் பட்டுச் சேலையையே ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார் மகார ணி. ... - 58