பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமதி மனோ, மா, கணபதி ஸ்தபதி ஆகியோரைப் பாராட்டுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் நாட்டின் கலைப் பொக்கிஷமாகத் திகழும் திருவாரூர்த் தேர் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே போன்ற தேர் ஒன்றை இங்கேயே நிர்மானித்து தமிழ்மறை என்று போற்றப்படும் திருக்குறளை இயற்றிய வள்ளுவரின் சில்ையை அதில் ஏற்றி வைத்து வீதிவலம் வரப் போகிற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். • சிவப்பு வட்டச் சூரியன் சின்னம் இந்த காட்டின் மிகப் புராதனமான சின்னம் என்பதை நீங்கள் அறிவீர்கள், கீழ்த்திசை நாடுகளின் கீழ்க்கோடியிலுள்ள ஜப்பான் காட்டில் உதிக்கும் சூரியன்தான் உங்கள் தேசத்துக்கு வருகிறான். ஆகவே உங்களோடு உறவுக்கு வருவது, அதாவது சூரியன் மூலமாக உறவுக்குக் கைகொடுப்பது காங்கள்தான்! - - பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்த காட்டின் சின்னமாகத் திகழ்ந்து வரும் சிவப்பு வட்டச் சூரியன் உருவத்தை தேசியக் கொடியில் பதித்து அதிகாரபூர்வமாகப் பறக்கவிட்டது 1870ல்தான். - - . பின்னர் 1872ல் ஜப்பானில் முதல்முதல் ரயில் ஒடத் தொடங்கியபோது, அதே கொடியைப் பறக்கவிட்ட பெருமை மெய்ஜி சக்ரவர்த்தியைச் சேர்ந்தது. அதற்குப்பின் ஏறத்தாழ நூறாண்டுகளுக்குப் பிறகு, இப்போது இங்கே வட்டச் சூரியனோடு வள்ளுவர் கோட்டத்தையும் இணைத்துப் பறக்கவிடுகிறோம். இந்தப் பெருமை , முடிசூட்டு விழா நடைபெற்றுள்ள இந்த நேர்த்தில் எனக்குக் கிடைத்திருப்பதை எண்ணிப் பெருமையும் மகிழ்ச்சியும் அடை றேன்." - ★ 。 . * * סר - வடி மாசிச்சியை இப்போது உற்றுப் பார்க்கும்போது ஜார்ஜுக்கு கெருடியது. - உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே!' என்றான். எங்கே?' - 'ஆ பியூஜியாமா பாங்க்லே!" சிரித்தாள். 'அறிமுகம் இல்லாமல் வெளிநாட்டுக்காரர் யாரும் அந்த பாங்க்கில் பணம் போட முடியாது என்றார்கள். தவிச்சேன். அப்ப நீங்க எனக்குக் கையெழுத்துப் போட்டு உதவி செய்தீங்க." 62