பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"ஜப்பான்ல ஒரு சதுர அடி நிலம் அம்பதாயிரம் டாலர் விலையாம்' என்றார் புள்ளி. - - "அப்படின்னா, இப்ப அம்பதாயிரம் டாலர் சொத்துக்கு நான் அதிபதி!' என்றார் விழாவேந்தன். "எப்படி?” 'கான் இப்ப நிக்கற இடம் ஒரு சதுர அடி. நான் இங்கே கிக்கறவரைக்கும் இந்த இடம் எனக்குத்தானே சொந்தம்' 'ஒரு "இஞ்ச் கிலத்தைக்கூட வீணாக்காமல் எங்க 896 பயிர் பண்ணியிருக்கான் ஜப்பான்காரன்' என்றார் புளள1. - 'இது ரொம்ப சின்ன காடு. இதுல எங்க பார்த்தாலும் மலை. மிச்சம் இருக்கிற துளியூண்டு இடத்துல குடியிருக்க வீடு, கார் போக ரோடு, ரயில்வே லைன், தொழிற்சாலை, கோயில், ஆறு, காடு மேடு இதெல்லாம் வேற. இவ்வளவும் போக பயிர் பண்றதுக்கும் இடம் இருக்கே, அதான் அதிசயம்' - - 'இன்னொரு அதிசயம்! ஜப்பான்ல எப்பவுமே அரிசிக்குப் பஞ்சம் கிடையாது. தி ஜாப்னிஸ் பீபிள் வில் கெவர் ஸ்டார்வ்’னு பெருமையாச் சொல்லிக்கிறாங்க." "பணப் பஞ்சம், சாப்பாட்டுப் பஞ்சம் இரண்டும் இல்லாத இந்த நாட்டில ஒரே ஒரு பஞ்சம்தான். அது இடப் பஞ்சம்!” 'கம் காட்டில இடத்துக்குப் பஞ்சம் இல்லே. மிச்ச ரெண்டுக்கும்தான் திண்டாட்டம்' என்றார் புள்ளி. "ஒண்னு செய்யலாமா? கொஞ்ச காலத்துக்கு இக்க ஜப்பான்காரங்களை இண்டியாவில் குடியேறச் சொல்லிட்டு காம ஜப்பானுக்கு வந்துரலாமா?' என்று கேட்டார் விழா வேந்தன். "ஏன்? ஜப்பான் நல்லாயிருக்கிறது உங்களுக்கெல்லாம் பிடிக்கலையா?' என்று கேட்டார் மனோரமா. - எவ்வளவு முன்னேறினாலும் ஜப்பானியர் தங்களுடைய பழமைச் சின்னங்களை மட்டும் மறப்பதில்லை' "அது மட்டுமில்லே. நன்றி பாராட்டுவதிலும் இவங்களை யாரும் மிஞ்சிட முடியாது. நாம் வள்ளுவர் குறளைச் சொல்லி, நன்றி பற்றி வாய் கிழியப் பேசுவோம். எல்லாத்துக்கும் "தாங்க்ஸ்’னு சுலபமா ஒரு வார்த்தையைச் சொல்லிட்டுப் போயிடுவோம். நம் நன்றியெல்லாம் வாயோடு சரி. காரியத்துவ ஒண்னும் இருக்காது. ஜப்பான்காரங்க அப்படியில்லை. அவங் 67