பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம் ஊரில் கன்றி கெட்ட மனுசங்களுக்கே மாலை போடறாங்களே! அதைவிட கன்றியுள்ள நாய்க்கு மாலை போடறது தப்பா?' என்று கேட்டார் முத்து. எல்லோரும் ஷிபுயா ரயில் ஸ்டேஷனுக்குப் போய், ஆந்த நாய்ச் சிலைக்கு மாலை போட்டபின், அந்தச் சிலைக்குப் பக்கத்திலேயே நின்று போட்டோ எடுத்துக்கொண்டார்கள். - "நாயின் முகத்தில் ஒரு சோகம் தெரிகிறதே! அந்த சோக பாவத்தைச் சிலையில் எப்படித்தான் கொண்டு வந்தார் களோ' என்று வியந்தார் கணபதி ஸ்தபதி. - - - 'எதையோ பறிகொடுத்த மாதிரி முகத்துல ஒரு சோகம்!' என்று பரிதாபப்பட்டார் மனோரமா. "ஆமாம்; அந்த நாயின் எஜமானர் ஒரு புரொபஸர். அவர் இறந்து இன்றோடு அறுபத்தஞ்சு வருஷம் ஆகுது. பாவம், இந்த நாய்க்கு அப்ப இரண்டரை வயதுதான்' என்றார் புள்ளி சுப்புடு, "அது சரி, சிலையை இந்த ஸ்டேஷன் வாசலில் கொண்டு வந்து வெச்சிருக்காங்களே, அதுக்கு என்ன காரணம்?" 'அந்த புரொபஸர் தினமும் இந்த ஸ்டேஷனுக்கு வந்துதான் ரயிலேறுவார். காலைல எட்டு மணிக்கு இங்க ரயில் ஏறி யுனிவர்ளிடிக்குப் போவார். அப்புறம் சாயந்திரம் அஞ்சு மணிக்குத் திரும்பி வருவார். காலையில் வீட்டிலிருந்து அவரோடு துணைக்கு வரும் அந்த காய் அப்புறம் சாயந்திரம் அவர் யுனிவர் விடியிலிருந்து திரும்பி வர வரைக்கும் இங்கேயே காத்துக் கிடக்கும்.' - - த்ஸொ, த்ஸொ' என்றார் கன்னன். “த்ஸொ, க்லொன்னாதீங்க இதோ இங்க கீழே கிக்குதே ஒரு காய், அது வாலாட்டுது!!' என்றார் மனோரமா. -- "அப்புறம்?' என்று சவாரசியம்ாய்க் கேட்டார் முத்து. 'அப்புறம் என்ன? ஒரு நாள் யுனிவர்ஸிடிக்குப் போன புரொப்லர் திரும்பி வரவேயில்லை. மாரடைப்பு காரணமா யுனிவர்ஸிடியிலேயே இறந்து போயிட்டார். அவரை அங்கேயே அடக்கம் செய்துட்டாங்க. அங்தச் செய்தியை காய்க்குச் சொல்லுவார் யாருமில்லை. எ ஐ ம | ன ைன க் காணாத "ஹச்சிகோ'ங்கற இந்த காய் ஸ்டேஷன் லயே வெகுநேரம் வரை பட்டினியோடு காத்திருந்துவிட்டு சோகத்துடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றது. மறுகாள் எஜமானன் இல்லாமலே காலை எட்டு மணிக்கு வழக்கம்போல் வந்து மாலை ஐந்து மணிவரை 70