பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காத்திருக்துவிட்டு திரும்பிச் சென்றது. இப்படியே பத்து வருட காலம், அது உயிரோடு இருந்தவரை தினமும் வந்து போய்க் கொண்டிருந்தது. எஜமான ரைப் பிரிந்த அந்த சோகம்தான் அதன் முகத்தில் தெரிகிறது. அதற்குத்தான் இங்கே சிலை வைத்திருக்கிறார்கள்' என்றார் ஷோஜோ. 'அடடா, இப்படி ஒரு நாடா!' என்று வியந்தார் கன்னன். 'கான் கூட ஒரு நாய் வளர்த்தேன். அதுவும் தினமும் நான் ஆபீஸாக்குப் போறப்பல்லாம் தெருக்கோடி வரை என் கூடவே வந்து வழி அனுப்பும்' என்றார் புள்ளி சுப்புடு, - . "தெருக்கோடி வரைக்கும்தானா? அ ப் பு ம் பஸ் ஏறிடுவீங்க போலிருக்கு' என்றார் மனோரமா. "தெருக்கோடியில ஒரு வெத்தலை பாக்குக் கடை இருக்கு. அங்கே அதுக்கு தினமும் ஒரு பொரை பிஸ்கட் வாங்கிப் போடுவேன். அதுக்காக வரும்! அதைச் சாப்பிட்டுட்டு அங்கிருந்து திரும்பி ஓடிப்போயிடும்' "தேவலையே! வீட்டுக்கே போயிருமா?" "எங்க வீட்டுக்குப் போகாது. அடுத்த வீட்ல் போய்ப் படுத்துக்கும்!" . "பொரைக்கு உங்ககூட வரும். காவலுக்கு அடுத்த வீட்டுக்குப் போயிருமா? நன்றி இடம் மாறிப் போச்சு போலிருக்கு' என்றார் மனேர் மா. "கன் றியாவது, மண்ணாவது அதெல்லாம் ஒண்னும் கிடையாது. அடுத்த வீட்ல் பெரிய வேப்ப மரம் இருக்கு. வேப்ப மரத்து கிழல்ல சுகமா படுத்துத் துரங்கறதுக்காக அங்கே ஓடிப் போயிடும். அவ்வளவு கயகலம்' என்று முடித்தார் புள்ளி. ★ LJo நாட்கள் பென்னட் சுறுசுறுப்போடு இயங்கினான். அடிக்கடி அகிஹாபாரா (எலெக்ட்ரானிக் கொத்தல்ால் சாவடி) போய் தனக்குத் தேவைப்பட்ட நுட்பமான கருவிகளை வாங்கி வந்தான். டிராயர் முழுதும் அவை கிரம்பிக்கிடந்தன. இரவில் வெகு கேரம் கண் விழித்து அவற்றை ஒன்றுக்கொன்று பொருத்திப் பார்ப்பதும் பிரித்துப் பார்ப்பதுமாக இருன்தான். ஒருநாள் டெலிபோன் செய்து 'ஜார்ஜ்! அதைச் செய்து முடித்துவிட்டேன். வந்து பாரு' என்றான். மேஜை மீது கன கச்சிதமாக ஒரு பெட்டி உட்கார்க் திருந்தது. - 71