பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

(இந்த நவீனத்தில் வரும் நிஜப் பெயர்களுடன் கற்பனைப் பெயர்களும் கலந்திருக்கின்றன.)

டோக்கியோவில் நடைபெறப்போகும் தேரோட்ட விழா ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றுள்ள முதல் குழுவில் திரு கணபதி ஸ்தபதி, திருமதி மானோரமா, விழா வேந்தன் முத்து, புலவர் கன்னன், புள்ளி சுப்புடு ஆகிய ஐவரும் முக்கியமானவர்கள்.

திருக்குறள் ஷோஜோவும் ஜப்பானியப் பெண் கோமோச்சியும் இந்த ஐவரையும் இம்பீரியல் பாலஸ் கிழக்கு வாசல் மைதானத்துக்கு அழைத்துச் சென்று, "இங்கிருந்துதான் தேரோட்டம் தொடங்கப் போகிறது' என்றார்கள்.

”அடேயப்பா! எவ்வளவு விசாலமான இடம்! ஏழெட்டு ஃபுட்பால் கிரவுண்ட் போடலாம் போலிருக்கே!” என்று வியந்தார் விழாவேந்தன் முத்து.

நம் விழாவுக்கு மிகப் பொருத்தமான இடம். இந்த இடத்தை யாருங்க தேர்ந்தெடுத்தது?"- கணபதி ஸ்தபதி கேட்டார்.

- "சாவி ஸார்தான். அவருக்குத்தான் ஜப்பான்ல ஒவ்வொரு இடமும் அத்துபடியாச்சே!'

"உங்க பேர் என்ன சொன்னிங்க?" ஜப்பான் தமிழறிஞர் ஷோஜோ கேட்டார்.

"முத்து!" - "எங்க நாட்டிலேகூட நிறைய முத்து உண்டு"- ஷோஜோ