பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரபலமானது. அங்கெல்லாம் ஆலயங்களிலுள்ள உற்சவ மூர்த்தி’ களைத்தான் தேரில் வைத்து வீதி வலம் வருவார்கள். திரு விழாவையொட்டி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளைக் காண ஏராளமான பேர் வெளியூர்களிலிருந்து வந்து கூடுவார்கள். தேர்த் திருவிழா என்றாலே கூட்டம் என்றுதான் பொருள் இப்போதெல்லாம் தமிழகத்தில் கலைஞர் பேசுகிறார் என்றால் தான் தேர்த் திருவிழாக் கூட்டம் கூடுகிறது. ஜப்பானிலும் . அடிக்கடி இம்மாதிரியான தேர் உற்சவங்கள் கடப்பதாகக் கேள்விப்படுகிறேன். இ க் ட் டி ல் தேரை வடம்பிடித்து இழுப்பதற்குப் பதிலாக மனிதர்களே சுமந்து செல்வது வழக்கமாம். இந்த விழாவுக்கு வெளிநாடுகளிலிருக்தெல்லாம் லட்சக்கணக்கான பேர் வந்து கூடியிருக்கிறீர்கள். வள்ளுவர் எல்லா காட்டுக்கும் பொதுவானவர். அவருடைய குறள்கள் வேதங்கள் போன்றவை. உலக மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளை ஈரடிகளில் வகுத்துக் கொடுத்த பெரும் புலவர் வள்ளுவர். அவருக்கு இங்கே நடைபெற்று வரும் விழாவைக் காணும்போது 'தமிழனென்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!' என்ற காமக்கல் கவிஞரின் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. - 'பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் போன்ற தமிழகக் கவிஞர்களை கெளரவப்படுத்தும் வகையில் அவர்கள் பெயரால் கட்டடங்களுக்குப் பெயர் குட்டுவது, அவர்கள் குடும்பத்தாருக்கு நிதி அளிப்பது போன்ற செயற்கரிய செயல்கள் புரிந்துவரும் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களை. இப்போது இந்த உலகமகாக் கவிஞர் விழாவைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.' - அடுத்தாற்போல் கலைஞர் எழுந்து பேசத் தொடங்கினார். அவர் தோளில் போட்டிருந்த ைேண்ட அங்கவஸ்திரம் முதுகுப் பக்கமாகப் போய் இடது கை மணிக்கட்டு வழியாக மேலே வந்து முடிந்திருப்பதை சக்ரவர்த்தி அவர்கள் சற்று கேரம் விநோதமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். - "தமிழ் நாட்டில் இப்படித்தான் எல்லாரும் அங்கவஸ்திரம் அணிவார்களா?' என்று அவர் அருகிலிருந்த கோபால கிருஷ்ணனைக் கேட்க, 'இல்லை. வ.உ.சி., வள்ளுவர், காமராஜ், அண்ண்ா, ராஜாஜி இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனி ஸ்டைல்' என்றார் கோபாலகிருஷ்ணன். கலைஞர் எழுந்து பேசத் தொடங்கினார்: 90