பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登岛 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்பது தெரியவரும். மேற்குறிப்பிட்ட பாசுரத்தில் மலையை ஆழ்வார் ஒரு சமத்காரம் பொலிய வருணித் திருப்பது மேல் நோக்காகப் பார்ப்பவர்க்கே தெரியவரும். திருமலை யாத்திரையாக வரும் பெரியவர்கள் பலர், வெறியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே. -பெரு. திரு-4:8, என்று குலசேகரப் பெருமாள் விரும்பினபடி, திருமலை ஏறும் வழியில் அன்பு வைத்து, திருமலைமேல் சென்று வாழ்வதைக் காட்டிலும்,திருமலை வழியில் கிடப்பதையே பெரும் பேறாகக்கொண்டு அவ்வழியிலேயே வீற்றிருந்து எம்பெருமானைச் சிந்தை செய்கின்றனர். அப்போது மூச்சுவிடுதல், உடம்பு அசைத்தல் முதலிய ஒன்றுமின்றி வால்மீகி போன்ற மாமுனிவர்களைப்போல் யோக நிலை யில் ஆழ்ந்து கிடக்கின்றனர். அவர்கள் கூந்தல் கற்றை முன்னின்று பின் தாழ்ந்திருப்பதைக் கண்ட பூங்கொடிகள் அவர்களை வீற்றிருக்கும் மனிதர்கள்’ என்று தெரிந்து கொள்ளாமல், இவை சிறுமலைகள்' என்று எண்ணி அவற்றின்மீது படர்கினறன. இங்ங்ணம் பக்தர்கள் மேலும் பூங்கொடிகள் படர்ந்திருப்பது அற்புதமான காட்சியாக அமைகின்றது. இப்படிப்பட்ட காட்சிக்கு இடமான திருமலையே நாம் விரும்பும் திருப்பதியாகும். இங்கு வழியில் வீற்றிருக்கும் பெரியோர்களை இளங்கிரி' (சின்னமலை) எனக் கூறினாரேயன்றி மலையை அன்று என்று அறியத்தக்கது. எனவே, திருமலையை இளங்கிரி என்று வருணிக்கவில்லை என்பது தெளிவு. இரண்டாவது பாசுரத்திலும் சமத்காரமாக ஒரு கருத்து வெளியிடப் பெறுகின்றது. தென்னன் பொருப் பும் தெய்வ வடமலையும்’ எனப் போற்றப்பெறும்