பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் §§ திருமாலிருஞ் சோலை மலை, திருவேங்கடமலைகளில் எம்பெருமான் வைத்துள்ள விருப்பத்தையே தம்முடைய திருவுள்ளத்திலும் வைத்திருக்கும் திறத்தை ஒரு சமத்கார மாக வெளியிடுகின்றார் ஆழ்வார். பூரீவசிகனபூஷணத் திலும் கல்லும் கனைகடலும் (பெரி.திருவந்-68) என்கிற படியே இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமா யிருக்கும்’ இளங்கோயில் கைவிடேல் (இரண், திருவந்-54) என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாக இருக்கும்' என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டேயாகும் என்பது ஈண்டு அறியத் தக்கது. ஆழ்வார் எம்பெருமானை நோக்கி, மேற்குறிப்பிட்ட இரண்டு மலைகளிலும் நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ் கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் என் இதயத்திலும் வாழ்கின்றாய் என்று கண்டறிந்த அடியேன் வெள்ளத்து இளங்கோயில் கைவிடேல் என்று பிரார்த்திக்கின்றேன்' என்கிறார் இப்பாசுரததில். இக்கருத்தை மேலும் தெளிவாக்குவது இன்றியமை, யாதது. 'வெள்ளம் என்பது திருப்பாற்கடல், திருப் பாற்கடல் எல்லா அவதாரங்கட்கும் மூலக்கிழங்காக இருப்பது. விட வாவதாரங்களும் மற்றும் அர்ச்சாவதாரங் களும் இதன் மூலமாகவே நிகழ்வதாகக் கொள்ளும் கொள்கை வைணவர்களிடம் உள்ளது. இக்காரனம் பற்றித் திருப்பாற்கடல் இளங்கோயில் எனப்படும். (இளங்கோயில்-பாலாலயம்). இக்காலத்தும் திருக்கோயில் களைப் பழுதுபார்த்துப் புதுப்பிக்க நேருங்கால் அங்குள்ள எம்பெருமான் திருமேனியைப் பாலாலயப் பிரதிஷ்டை” செய்வது வழக்கமாக இருப்பதை நடைமுறையில் காண லாம். வேறொரு பெருங்கோயிலில் சென்று சேர்வதற்கு 12. பூரீவச. பூஷ. சூத்திரம் 176, 17? (புருஷோத்தம நாயுடு பதிப்பு)