பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வடவேங்கடமும் திருவேங்கடமும் மாணடியால் ஞாலம் அளந்த வரலாற்றால் திருவேங்கட முடையானைப் பெரியோர்கள் கூறி வருவதுபற்றி ஈட் டாசிரியரும் குறிப்பிடுகின்றார்: திருவேங்கடமுடை யானையன்றோ கவிபாடிற்றெனனில், கொண்டாய் குற ளாய் நீலமீரடியாலே விண்டோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா (பெரி. திரு. 1.16; 4; என்றும், மண்ண ளந்த இணைத் தாமரைகள்' என்றும், உலகம் அளந்த பொன்னடியே அடைந்துய்ந்து என்றும் ஆழ்வார்கள் அருளிச் செய்யா நிற்பார்கள்; எல்லாரையும் திருவடிக் கீழ் இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், 'வரையாதே கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங் கொடுத்துக் கொண்டு நிற்கிறபடியாலும் திருவேங்கட முடையானை துரீவாமனனாகச் சொல்லக் கடவதிறே" என்பதாக. வேதத்திலும் அகில புவனங்களையும் தன் மூவடிக் கீழ் ஒடுக்கியவன் எவனோ, அப்பெருமான் கிரியில் நிலை பெற்றருள்கின்றான்' என்ற கருத்து திரிவிக்கிரமனாகிய திருவ்ேங்கடமுடையான் திருமலையில் நித்திய வாசம் செய்தருள்கின்ற சிறப்பையே குறிப்பதாக விளங்குவர் பேராசிரியர் மு. இராகவய்யங்கார். இந்த விழுப்பொரு ளையே இழைத்தார் ஒருவருமில்லாமறைகளை இன்தமி ழால், குழைத்தாராகிய குருகைப்பிரானும்: குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் 2. ஆராய்ச்சித் தொகுதி-கட்டுரை, 20-பக். 269 3. சட. அத்.-59