பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வடவேங்கடமும் திருவேங்கடமும் சேவியுங்கள்” என்று இளைஞர்களை ஆற்றுப் படுத்துகின் றார் ஆழ்வார் ." வழிபாட்டின் பயன்: இங்ங்னம் திருவேங்கட முடையானை வழிபடுவதால் பயன் என்ன? இரண்டு பாசுரங்களால் இதனைத் தெரிவிக்கின்றார். நித்தியசூரி கள் எம்பெருமானை இடைவிடாது அநுபவிக்கப்பெற் றாலும் அங்குப் பரத்துவத்திற்கே உரிய உண்மைக் குணங்களை மட்டிலுமே அநுபவிக்கலாம். செளலப்பிய செள சீல்ய குணங்கட்க்குப் பாங்கான எளிமைக் குனங் களை இந்த நிலத்திலே வந்துதான் அதுபவிக்க வேண்டும். அவற்றை அநுபவிப்பதற்காக உண்மையான பக்தியுடன் அவர்கள் திருமலைக்கு வருகின்றனர். பாவங்களை யும் உடம்பைப்பற்றின நோய்களையும் போக்கடிக்க வல்லது திருமலையே. அசுரர்கள் மாளும்படி தனது திருவாழி யைத் தொட்டு வானவர்களைக் காத்தருளின எம்பெருமா னுடைய மலை திருமலையேயாகும். வேங்கடமே விண்ணோர் தொழுவதுவும் மெய்ம்மையால் வேங்கடமே மெய்வினைநோய் தீர்ப்பதுவும்; - வேங்கடமே தானவரை வீழத் தன்னாழிப் படைதொட்டு வானவரைக் காப்பான் மலை. -நான். திருவந், 48 9. முதல். திரு. 45; மூன். திரு. 77 என்ற பாசுரங் களிலும் இந்த வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது.