பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i 8 வடவேங்கடமும் திருவேங்கடமும் بی سیم مس - பற்றாசாகக் கொண்டு எம்பெருமான் தம்மைத் திருவேங் கடம் பாடினவனாகக் கணக்கிட்டுக் கொண்டான். யாத்ருச்சிகமாக சொன்ன உத்தியால் பரமபதத்தையும் பெற்றவராகின்றார். தம் அறிவு பூர்வமாக ஒரு நல்ல சொல்லும் சொல்லாதிருக்கவும் எம்பெருமான் தானே மடிமாங்காய் இட்டுத் திருவுள்ளம் பற்றுகின்ற இச்செயல் விபத்தற்குரியது என்று இதனையே அநுசந்தித்து ஈடுபட்டு நிற்கின்றார். 'எம்பெருமான் எல்லா சாத்திரங்களாலும் புகழப் பெறுபவனாதலால் அவனுக்கு நூலாளன்’ என்ற திருப் பெயர் உண்டு. இதற்குப் பெண்பால் நூலாட்டி என்பது; இது பெரிய பிராட்டியாரைக் குறிப்பது. அவளுடைய கேள்வனார் எம்பெருமான்; அவன் கற்கின்ற நூல் வலை யில் பட்டிருந்தவன்; அதாவது பரம்பரையாக எம்போலி யரால் ஒதப்பெற்று வருகின்ற சாத்திரங்க ளாகின்ற வலையிலே புறமதத்தினராலும் குயுக்திவாதத்தினராலும் அசைக்கவொண்ணாதபடி அகப்பட்ட எம்பெருமா னுடைய திருவடிகளாகின்ற வலையிலே நான் சிக்கிக் கொண்டிருக்கின்றேன்' என்கின்றார். வெற்பென்று வேங்கடம் பாடினேன்; வீடாக்கி நிற்கின்றேன்! நின்று நினைக்கின்றேன் - கற்கின்ற நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார் கால்வலையில் பட்டிருந்தேன் காண் , -நாள். திருவந், 40