பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் | 13 என்பது ஆழ்வார் பாசுரம். மூன்றாம் அடியில் சாத்திரங் களை எம்பெருமானுக்கு வலையாகவும் ஈற்றடியில் அவ் வெம்பெருமானின் திருவடிகளைத் தமக்கு வலையாகவும் அருளிச் செய்தார். எம்பெருமானைச் சாத்திரங்களி னின்றும் பிரிக்க முடியாததைப்போலத் தம்மையும் அப் பெருமானின் திருவடிகளினின்றும் பிரிக்க முடியாது ‘எம்பெருமான் ஒரு வலையில் அகப்பட்டான்; நானும் ஒரு வலையில் அகப்பட்டேன்' என்று சமத்காரமாகச் சொல்லப்பட்ட நயம் அதுபவித்து மகிழத்தக்கது. அடியார் பெருமை : அடியார் பெருமை எல்லாச் சமயத்தினராலும் சிறப்பித்துப் பேசப்படுகின்றது. ஆழ்வார்களின் தலைவரான நம்மாழ்வார் மிகச் சிறப் பித்தும் பேசுவதை நாம் அறிவோம். இக்கருத்தை இந்த ஆழ்வாரும் ஒரு மாசுரத்தில் சிறப்பித்தும் பேசுகின்றார். திருவேங்கடமுடையானின் திருவடிகளில் பலவித வண்ண மலர்களைச் சமர்ப்பித்து வழிபட்டவர்கள் யாவரும் பரம பதத்தில் பெருமை பொலிய இருந்து ஆட்சி செய்பவர்கள். இவர்களைக் காட்டிலும் எம்பெருமானுக்கு அடிமைப் பட்டவர்கட்கு அடிமைப்பட்டவர்கள் மிகவும் சிறந்தவர் களாவர் என்கின்றார் ஆழ்வார் (90). இங்ங்னம் பக்திசாரரின் பாசுரங்கள் விளைவிக்கும் அநுபவத்தை நம் அதுபவமாக்கிக் கொண்டு பகவதது பவம் பெற்று மகிழ்கின்றோம்.
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/151
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
