பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் காட்டும் திருவேங்கடம் 127 ‘தென்ன என வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள் அன்னனைய பொற்குவடாம் அருத்தவத்தன் ஆவேனே. -பெரு. திரு. 望ごf浴 (தென்ன-தெனதென; அன்னனைய-அப்படிப் j سه تالا என்று பொன்மயமான சிகரமாகும் நசையினை வெளி யிடுகின்றார். சிறிது நேரத்தில் இத்தப் பாரிப்பும் மறையத் தொடங்குகின்றது. புதிய திருக்கோயில்களை நிறுவு r t 略 வோர், பழைய கோயிலுக்குத் திருப்பணி புரிவோர், மலை முகட்டுப் பாறைகளை உடைத்துக் கொண்டு போவாராத லால் அதுவும் தனக்கு ஏற்றதன்று என எண்ணுகின்றார் ஆழ்வார். ஆதலால் எவராலும் பெயர்த்துக்கொண்டு போக முடியாத கானாறாக வேனும் பெருகும் பேறு கிடைக்கக் கூடாதா என்று எண்ணுகின்றது இவர் மனம். உடனே, தேனார் பூஞ்சோலைத் திருவேங் கடமலைமேல் கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே. -பெரு. திரு. 4:7 என்று தன் அத்யவசாயத்தை வெளியிடுகின்றார். இக்கருத்தைச் சிந்தித்ததும் இதிலும் ஒரு குறையிருப் பதை உணர்கின்றார். ஆற்றில் எப்பொழுதும் நீரோட் டம் இருக்காதன்றோ? அப்பொழுது திருமலையிலும் வாழ்க்கை இழந்ததாகவன்றோ முடியும்? அங்ங்ணமின்றி எப்பொழுதும் ஒரு தன்மையாகத் திருவேங்கடமுடை