蠶證 வடவேங்கடமும் திருவேங்கடமும் யானைச் சேவிக்கவரும் அடியார்களின் அடிப்பொடி படும் படி வழியாய்க் கிடக்கும் நிலைமை தனக்கு வாய்த்தால் என்று நினைக்கின்றது இவரது துய்மையான திருஉள்ளம். உடனே, ைெதியார் தண்சோலைத் திருவேங் கடமலைமேல் நறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே. -பெரு. திரு. 4:8 ஆர் - மணம்மிக்க; நெறி-வழி: என்து தன் அவாவினைப் புலப்படுத்துகின்றார் ஆழ்வார். |தனைச் சிறிது ஆராய்ந்தவுடன் இதிலும் ஒரு குறை தட்டுப்படுகின்றது. வழி என்பது அவரவர் வசதிக்குத் தக்கபடி மாறுபடுவதன்றோ? ஒரிடத்திற்கு ஒன்றுதான் வழியாக இருக்க முடியும் என்று சொல்ல முடியாது. அன்றியும், அது விலகி நிற்கும் பான்மையது. இப்போ துள்ளதுபோல பேருந்து வசதிகள் இருக்கும்போது எல்லோரும் நடந்துதான் வருவர் என்று சொல்ல முடியுமா? இவற்றையெல்லாம் எண்ணிய ஆழ்வார் நெறியாக அமையவேண்டும் என்று விரும்புவதைவிட எம்பெருமானது திருவருள் நோக்கம் பதியுமாறு அவன் கண் வட்டத்தில் மெய்யடியாரும் பிறரும் வேறுபாடின்றி எல்லோரும் இடைவிடாது நடமாடும்படியான ஓர் அசேததப் பொருளாகி, அதில் அவனது திருப்பவளத்தைக் காணும்படியான அறிவையும் பெறவேண்டும் என்று தன் சிறப்பான விருப்பத்தை விண்ணப்பிக்கின்றார். நெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையடும் கிடந்தி யங்கும் படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே. -பெரு. திரு. 4:9
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/160
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
