பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மங்கை மன்னன் கருத்தில் வேங்கடம் 盈盛磊 னனாய்த் தமக்குத் தாமே சொல்லிக் கொண்டே குறை திர உபதேசித்தார். மனக்கோலத்துடனும் எம்பெகு மானும் தீடீரென்று மறைந்து பேரிய திருவடிமேல் கான மேகம் போன்ற திருமேனியுடன் சேவை சாதித்தார். இங்கனம் யாதொரு காரணமும் பற்றாது கிடைத்த திருமந்திரத்தையும் அதற்கு உள்ளீடான சீமந் நாராயண னுடைய சொரூட ரூப குண விபூதி சேஷ்டிதங்கனையும் அருள்மானி என்னும் பெரிய பிராட்டியாரின் அருளினாலே கண்டு அநுபவிக்கின்றார். தானும் திருமங்கையாழ்வான் என்ற திருப்பெயருடன் ஆழ்வாராகின்றார். இந்த அநுபவத்தின் விளைவாக, வாடினேன்; வாடி வருந்தினேன் மனத்தால்: பெருந்துயர் இடும்பையில் பிறந்து கூடினேன்; கூடி, இளையவர் தம்மொடு அவர் தரும் கலவியே கருதி ஒடினேன்; ஒடி உய்வதோன் பொருளால் உணர்வெனும் பெரும்பதம் திரிந்து நாடினேன்; நாடி தான் கண்டு கொண்டேன் நாரா யனாஎன்னும் நாமம். -பெரி, திரு. 1.1:1 என்ற முதற்பதிகத்தின் முதல் பாசுரம் தொடங்கிப் பத்துப் பாசுரங்களால் முதல் திருமொழியை முடிக்கின் றார். வடநாட்டுத் திருத்தலப் பயணம்: திருமத்திரம் பிறந்த இடம் பதசிகாச்சிரமம். பதரி இமயமலையிலிருக் கும் ஒருதிருத்தலம். பதரிஎன்பது வடமொழியில் இலந்தை மரத்தின் பெயராகும். அம்மரங்கள் அடர்ந்து கிடக்கும் வதரி, வதரி நாதன் எழுந்தருளியிருக்கும் திருமலை வ.தி.-10