பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 177 திருக்கோயிலுக்கு மிக அருகில் திருத்தலப் பயணிகள் தங்குவதற்கு இவை மிக வசதியானவை. திருவாய்மொழி யில் ஏய்ந்த பெருங்கீர்த்தி' என்ற தனியனை அருளிச் செய்தவர் இவர். கூரத்தாழ்வானுக்குப் பின் பிறந்தவர் என்று இவரைக் கருதுவர். எம்பெருமானிடத்தில் மேன்மை, நீர்மை என்ற இரண்டு வகையான குணங்கள் உள்ளன. மேன்மை காண்பது பரமபதத்திலே, நீர்மை காண்பது இந்திலத் திலே. மேன்மையைக் காட்டிலும் நீர்மையே சிறந்த தாகையிலே அங்குள்ள யாரும் இங்கே போதருகின்றனர். கானமும் வானரமும் வேடும்' ஆன இவற்றுக்கு முகம் கொடுத்துக் கொண்டு நிற்கின்ற செளசீல்ய குணத்தை அதுசந்தித்து ஈடுபட்டவர்களாய் சேனை முதலியார் தொடக்கமான நித்திய சூரிகள் திருவேங்கடமுடை யானைச் சேவிக்க விரும்பி திவ்விய மலர்களை எடுத்துக் கொண்டு இங்கே வருகின்றனர். அந்தச் சில குணத்தில் தம்மை மறந்து முறைப்படி அருச்சிக்கமாட்டாது தாம் கொணர்ந்த மலர்களைச் சிந்துகின்றனர். கொம்பில் நின்ற மலர்களைக் காட்டிலும் நிலத்திலே விழுந்தபோது, அந்நிலத்தின் மிதியாலே, சிந்தின மலர்கள் செவ்வி குன்றா முல் மலர்ச்சியும் மணமும் மல்கி விளங்குகின்றன. இதனால் திருவேங்கடம் சிந்துபூ மகிழும் திருவேங்கடம்" ஆகின்றது. ஆழ்வார் திருவாக்கில் (2) வைகுண்டத்தில் புகழுக்கு எல்லையுண்டு; திருவேங்கடத்தில் அதற்கு முடிவு இல்லை. அப்படிப்பட்ட திருமலையில் அந்தமில் புகழ் பெற்று விளங்கா நிற்கின்றான் எம்பெருமான், இந்த எம்பெருமானை "மாயன்' என்கின்றார் ஆழ்வார்; ஆச்சரியமான வடிவழகு முதலியவற்றை யுடையவன் என்றபடி அவற்றில் ஒன்றை எடுத்துரை. கின்றார் அணிகொள் செந்தாமரைக் கண் ணன்' என்று. வ.தி.-12