பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 1. 7 § வேடு மான’ இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கின்றவன் நித்தியசூரிகட்கு முகங்கொடுக்கின்றான் என்பது எங்ஙனம் ஏற்றமாகும்? அயர்வறும் அமரர்கள் அதிபதி என்றால் அது வைகுண்டநாதனுக்கு ஏற்ற மாகலாமேயன்றி திருவேங்கடமுடையானுக்கு ஏற்ற மாகாது. நீசனேன் நிறையொன்றும் இல்லாத என்னிடத் தில் ஆசாபாசம் வைத்து அதனால் புகர் படைத்திருக் கின்ற எம்பெருமானை வானவர் ஈசன்' என்பதால் என்ன பெருமை? ஈட்டிலே காண்பது: நித்திய சூரிகளுக்கு ஈசனா யிருந்தான். என்பக்கலில் பற்றை வைத்தான். அவர்கள் சத்தை உண்டாகைக்காக அவர்களோடே கலந்தான்; தன் சத்தை பெறுகைக்காக என்னோடே வந்து கலந்தான்; பிரதாம்யத்துக்கும் (முதன்மைக்கும்) பழிக்கும் செங்கல் சிரைக்கும் (கல்லாடைக்கும்) ஜீவனம் வைப்பாரைப் போன்று அவர்கள் பக்கம் நெஞ்சும் உடம்பும் தந்தது எனக்கு என்னுடன் கலப்பதற்கு முன்னர் சுடர் சோதி யாக (வடிவிற் பிறந்த புகர்) நின்றான்; கலந்த பின்னர் முன்பில்லாத புகரெல்லாம் வடிவிலேயே உண்டானதால் பரம்சுடர்' என்று அருளிச் செய்கின்றார். பிராட்டி யோடே கலந்தாற்போலே பேரொளிப் பிழம்பாய் இரா நின்றான் என்றபடி (4). கீழ்ப்பாட்டில் (4) 'நீசனேன் நிறையொன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர் சோதிக்கே என்று கூறியதில் எல்லாவுலகும் தொழும் (5) என்கின்ற பொருள் சித்தமாகவே உள்ளது என்று காட்டினபடி. இதனைப் பிரதிவாதிபயங்கரம் அண்ணங்கராசாரிய சுவாமிகள், 'ஒரு கல்விக் கூடத்தில் மிகவும் மூடனான ஒருவன் தேர்வில் தேறி விட்டான் என்றால் மற்றையோர் கள் தேறினர் என்பது எப்படிச் சித்தமோ அப்படியே ஆழ்வார் தாம் தொழுதமை சொன்ன அளவில் எல்லா