惑参缀 வடவேங்கடமும் திருவேங்கடமும் காணப்படுகின்றது. அதைக்கொண்டு தாம் சேகரித்து வைத்திருக்கும் பிரகாசிக்கின்ற இரத்தினக் கற்களை வைத்து எடை காண்கின்றார். மன்னு குடிக்குறவர் வானுர் துலாத்திடையே மின்னு மணிநிறுக்கும் வேங்கடமே (20) (மன்னு-நிலை பெற்ற வான் ஊர்-வானத்தில் செல்லுகின்ற, மணி-இரத்தினம்} என்பது திவ்வியகவி காட்டும் சொல்லோவியம். இந்தக் குறவர்களைப் பற்றிய இன்னொரு காட்சி: தினைப் புனத் தைக் காக்கின்ற குறவர்கள் தண் மதியில் களங்கத் தோற்ற மாக இலங்கும் மான் வடிவத்தைக் காண்கின்றனர். அது னைத் தினைப் புனத்தை மேயவரும் மான் எனக் கருதுகின் றனர். உடனே வானத்தில் வில் வடிவாகக் காணப்பெறும் தனுர் இராசியைக் கை வில்லாகக் கொண்டு அம்பு எய்ய முயலுகின்றனர். கொல்லைக் குறவர் குளிர்மதிமா னைக்ககன வில்லைக் குனித்தெய்யும் வேங்கடமே (21) (ககனம்-வானம்; வில்-தனுர் இராசி) என்பது திவ்விய கவியின் சொல்லோவியம். அம்புலியில் வாழும் மான் வேங்கடமலையில் அதிரும் குரலையும் திறந்த வாயையும் கொண்ட வெம்புலியைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றது. இதனை, அம்புலியின் வாழ்மான் அதிருங் குரற்பகுவாய், வெம்புலியைக் கண்டேங்கும் வேங்கடமே (22) [அம்புலி-சந்திரன்; பகுவாய்-திறந்தவாய்) என்ற திவ்விய கவியின் சொல்லோவியத்தில் கண்டு மகிழ GVff) .
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/238
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
