} வடவேங்கடமும் திருவேங்கடமும் விண்னை முத்தமிடும்படி வளர்ந்துள்ள பாக்கு மரங்கள் .ம்பருலகத்துக் கற்பகச் சோலையாகிய பந்த லுக்கு நாட்டப்பேற்ற அழகிய கால்கள் போல் காட்சிய ளிக்கின்றன. அப்பாக்கு மரத்தில் வெடித்த நிலையிலுள்ள வெண்ணிறப் பாளைகள் வெங்கதிரோனுக்கு அசைக்கப் பெறும் வெண்கலசிபோல் காட்சி அளிக்கின்றன. தண்கமுகின் பாளை தடங்கதிரின் செல்வனுக்கு வெண்கவர் போலசையும் வேங்கடமே (37) fகதிரின் செல்வன்-சூரியன் i என்பர் திவ்வியகவி. முழுமதியம் வானத்தில் இறுமாந்து உலவுகின்றது. அப்பொழுது அருகில் செல்லும் மத யானையொன்று அத்திங்களை இனிய பாவில் கலந்த உணவுத் திரளை - தீம்பாற்கவளம் - என்று கருதி துதிக்கையை நீட்டிய வண்ணம் உள்ளது (31). மேலும் சில காட்சிகள் : திவ்விய கவி மேலும் பல இடங்கட்கு இட்டுச் சென்று பல்வேறு காட்சிகளைக் காட்டுவார். திருமலையிலுள்ள தென்னை மரத்தில் வெண்மையான பாளை மலர்ந்து கிடக்கின்றது சுனை நீரிலுள்ள மீன் கூட்டங்கள் அதனைக் கொக்கு என்று கருதி நீரினுள் அஞ்சி மறைகின்றன (27), தென்னை மரத்தினின்று இளநீர்க் காய்கள் கீழே வீழ்தலால் அம்மலையிலுள்ள இரத்தினங்கள் சிதறுகின்றன. செந் நிறமுள்ள அவற்றை நெருப்பென்று கருதி யானைகள் விலகிச் செல்லுகின்றன (29). வேங்கடகிரியில் மேகங்கள் இடி முழக்கம் செய்கின்றன. அம்முழக்கத்தை மத யானை யின் பிளிறல்கள் என்று கருதி அவ்யானைகளை விழுங்கு வதற்கு மலைப் பாம்புகள் வாயைத் திறந்த வண்ணம். காத்திருக்கின்றன
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/242
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
