i & வடவேங்கடமும் திருவேங்கடமும் என்ற முமுட்கப்படி வாக்கியமும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. பாலுண்ணும் பச்சைக் குழவி எங்கனம் அன்னையின் உறுப்புகள் யாவையும் விட்டு, தான் உயிர் வாழ்வதற்கு இடனாய் உள்ள அவள் கொங்கையிலே வாய் வைக்கின்றதோ, அங்கனமே சேஷியாகின்ற ஈசுவரனைப் பற்றப் புகும் சேஷபூதனும் எம்பெருமா னுடைய பல உறுப்புகளையும் விட்டுத் தான் உய்வதற்கு இடனாய் உள்ள அவன் திருவடிகளையே பற்றுகின்றான் என்பது இவண் குறிப்பிட்ட வாக்கியத்தின் பொருளாகும். குழந்தை தாயின் முலையில் வாய் வைப்பது குழந்தையின் இயல்பாக இருப்பதைப் போலவே, இறைவன் திருவடி களில் இழிவது சேதநனின் தன்மைக்கு இயல்பாக அமைந்திருக்கும் என்பது சிந்திக்கத் தக்கது. இக்கருத்தை உள்ளத்தில் அமைத்துக் கொண்டு, தாயின் மெய்யின் உறுப்புக்கள் தனியாய் பலவும் இருக்கையிலே பாயும் குழவி மார் பகத்தில் பாலினை மகிழ்ந்து பருகுதல்போல் மாயன் உன்றன் நீள்கழலை மகிழ்ந்து வணங்கும் சமதர்மன் நேயத் திருவடி மாலைதனை நிதம்கற் போர்நின் அருள்பெறுவர் (101) என்று பாடலை உருவாக்கி மகிழ்வார் சமதர்மன் என்னும் கவிஞர். இந்தக் கருத்துகளை அடிப்படையாக்க் கொண்டு அந்தாதியின் உறுப்பாக பாதவகுப்பு' 2. கவிஞர் சமதர்மன்: திருவேங்கடவன் திருவடி மாலை (பூர் வித்யாலட்சுமி பதிப்பகம், 564, பெரியார் ஈ. வெ. ரா. நெடுஞ்சாலை, அரும் பாக்கம், சென்னை - 600 106.1
பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/248
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
