பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛器强 வடவேங்கடமும் திருவேங்கடமும் ஆழ்வார்களின் பாசுரங்களனைத்தும் எம்பெரு மானால் அர்ச்சை வடிவிலிருந்து ஏற்றுக்கொள்ளப் பெற்றவை என்பதை நாம் அறிவோம். இதனைத் திவ்விய கவி ஞான முதலாழ்வார்கள், வெண்பாவை ஆதரித் தான்” (31) என்ற சொற்றொடரால் குறிப்பிடுவார். ம்ேலும் அர்ச்சை, விபவம், பரம் என்ற மூன்று நிலைகள் ஒரு பாடலிலும் (35), வியூகம், விபவம் பரம் என்ற மூன்று நிலைகள் மற்றொரு பாடலிலும் (46) குறிப்பிடப் பெறுகின்றன. இங்கனம் ஒரே பாடலில் பல நிலைகளில் கலந்து வருதலையும் இந்நூலில் காண்கின்றோம். எம் பெருமான் அன்பர் உள்ளத்தில் நிலைபெற்றிருக்கும் அந்தர்யாமித்துவத்தை உள் நிலைக்கும் சோதி” (36) என்று குறிப்பிடுவார் ஆசிரியர். இதனைத் திருமங்கை யாழ்வார், உளங்கனிந் திருக்கும் அடியவர்தங்கள் உள் ளத்தில் ஊறிய தேன்’ என்று கூறி இனியராவர். பூதத்தாழ்வாரும் பேயாழ் வாரும், 'மனத்துள்ளான்' என்று கூறுவர். உலகைப் புரக்கும் செயல் எம்பெருமான் இந்த உலகைப் புரக்கும் செயல் பல பாடல்களில் நுவலப் பெறுகின்றது. எம்பெருமான் பாலனாய் ஏழுலகுண்டு ஆல் இலையில் துயின்றதாக ஆழ்வார் பெருமக்கள் கூறியதை நினைவில் கொண்டு நமது திவ்வியகவியும் தம் பாடலில் (13) குறிப்பிடுவர். பிரளய வெள்ளத்தில் தான் பெரி. திருெ 4. 5. இரண். திருவந். 28. மூன். திருவந் 3