பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திவ்வியகவியின் கருத்தில் வேங்கடவாணன் 翌器置 இவற்றை அடுத்துப் பிரகலாதன் பொருட்டுத் துணி னின்றும் நரசிங்கம் தோன்றினமையும் (8), அன்னமாய் நின்று நான்முகனுக்கு அருமறைகளை உபதேசித்தமையும் {21, 17), கசேந்திரனுக்கு அபயமளித்தமையும் (21), கடல் கடைந்து தேவருக்கு அமுதையும் சிவபெருமானுக்கு நஞ்சையும் அளித்தமையும். (!!) ஆகிய நிகழ்ச்சிகளைத் தமது பாடல்களில் எடுத்துக் கூறிப் பரவசப்படுகின்றார் திவ்விய கவி. அர்ச்சாவதாரத்தில் சூடிக்கொடுத்த சுடர் க் கொடி யின் மாலையை ஏற்றமை (AG), திருமங்கையாழ்வாரின் திருப் பாசுரங்களை ஏற்றருளியமை (70), முதலாழ்வார் களின் திருவந்தாதிகளை ஆதரித்தமை (11) ஆகிய செயல் களும் எடுத்தியம்பப்பெறுகின்றன. இத்தகைய வெற்றிச் செயல்களை நிகழ்த்தியவனே திருவேங்கடமுடையா னாகச் சேவை சாதிக்கின்றான் என்பது திவ்விய கவியின் திருவுள்ளமாகும்.