பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வடவேங்கடமும் திருவேங்கடமும் இருத்தலும் தனக்குப் போதும் என்று கூறியவர் குலசேக ரப் பெருமாள். செம்பவன வாயான் திருவேங் கடமென்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே. -பெரு. திரு. 4:10 மாடாக நிழற்றுசெழு மரனாகத் தவச்சிறிய பூடாகக் குழைத்கநறும் புதலாக வழிபடுமோர் ஓடாகப் பெறுவமெனில் உயிர்காள்! நற் கதி பெறலாம் வீடாகத் திருநெடுமால் வீற்றிருக்கும் - வேங்கடத்தே(72) (மாடு-விலங்கு, நிழற்று-நிழல் தரும், பூடுಠಿ புதல்-புதர் வழிபடும்-வழியில் கிடக் குங்கி என்று பாடுவர். "திருநெடுமால் தனது இருப்பிடமாக உகந்து கொண்டிருக்கும் திருவேங்கடத்தில் விலங்காகவா யினும், நிழலைத் தரும் செழுமரமாகவாயினும், மிகச் சிறிய புல் பூண்டுகளாகவாயினும், தளிர்த்த நல்ல புத ராகலாயினும், வழியில் கிடப்பதொரு ஓடாகவாயினும் இருக்கப் பெறுவோமென்றால் நாம் சிறந்தநற் கதி பெற லாம்' என்று சீவர்களை நோக்கிக் கூறுகின்றார் கவிஞர் பெருமான். இன்னொரு பாடலில் எம்பெருமான் எழுத்தருளி யிருக்கும் சில இடங்களைக் குறிப்பிடும் ஆசிரியர் திருவேங் கடம் என்னும் அழகிய திருமலையையும் அவற்றுள் ஒன் நாகக் குறிப்பிடுவர் .